Tuesday, 31 March 2015

கவலையின் போது ஓதும் துஆ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
புகாரி - 6369,5425.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 31 March 2015 by Unknown · 0

Monday, 30 March 2015

வெற்றியாளர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.    

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 30 March 2015 by Unknown · 0

Sunday, 29 March 2015

இயற்கை மருத்துவ குறிப்புகள்

ஆல மர மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு, எலும்பு வலியை தடுக்கலாம்.

வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வெந்தயக் கீரை, மாதுளை ஓடு, வில்வ ஓடு மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம்.

அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.

அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.

அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்
http://www.satrumunnews.com/2015/03/natural-medicine-tips.html

Sunday, 29 March 2015 by Unknown · 0

நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
(அல்குர்ஆன் - 2:201)
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலம்லும் நன்மையை
அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து
எங்களை நீ காத்தருள்வாயாக?' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
புகாரி - 4522.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Saturday, 28 March 2015

குர்ஆன்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல்குர்ஆன் - 2:2)
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 28 March 2015 by Unknown · 0

ONLINE SERVICES

மேலும் வாசிக்க

by Unknown · 0

Friday, 27 March 2015

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா?

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா:
ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

மேலும் வாசிக்க

Friday, 27 March 2015 by Unknown · 0

அருட்கொடை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் - 5670.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் - 5671.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Thursday, 26 March 2015

அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் - 16:18)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 26 March 2015 by Unknown · 0

Wednesday, 25 March 2015

நற்செயல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் - 5012.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 25 March 2015 by Unknown · 0

Tuesday, 24 March 2015

சுவர்க்கவாசிகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் - 2:82)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 24 March 2015 by Unknown · 0

Monday, 23 March 2015

வாழ்வாதாரம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் - 4998.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 23 March 2015 by Unknown · 0

Sunday, 22 March 2015

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 22 March 2015 by Unknown · 0

Saturday, 21 March 2015

உமர் (ரலி) அவர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி(ன் வீட்டுக்குள் செல்ல அவர்களி)டம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் உரத்த குரலில் (குடும்பச் செலவுத் தொகையை உயர்த்தித் தரும்படி கேட்டு) பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தம் பர்தாக்களை அணிந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளே சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுவதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) இருக்கச் செய்வானாக" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உமரே!) இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். என்னிடம் (சகஜமாக) இருந்த இவர்கள் உம்முடைய குரலைக் கேட்டதும் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்றுவிட்)டார்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இவர்கள் (எனக்கு அஞ்சுவதைவிட) அதிகமாக அஞ்சத் தாங்கள் தான் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறிவிட்டுப் பிறகு, "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால், நீங்கள் வரும் பாதையல்லாத வேறு பாதையில் அவன் சென்றுவிடுவான்" என்று சொன்னார்கள்.
முஸ்லிம் - 4768.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 21 March 2015 by Unknown · 0

Friday, 20 March 2015

அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக (முறை இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புகாரி - 3293)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 —

Friday, 20 March 2015 by Unknown · 0

Wednesday, 18 March 2015

இறைவனிடத்தில் நெருங்கியவர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக! 
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் - 7:206)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 18 March 2015 by Unknown · 0

Monday, 16 March 2015

Phone Lock Reset

அனைத்து விதமான Phone களின் Lock ஐ Reset செய்யக்கூடிய Code இதோ. 
Default user code: 1122, 3344, 1234, 5678
*#66*# Set Factory Mode CONFIRMED

*#8375# Show Software Version CONFIRMED

*#1234# A2DP ACP Mode CONFIRMED

*#1234# A2DP INT Mode CONFIRMED

*#0000# + Send : Set Default Language CONFIRMED

*#0007# + Send : Set Language to Russian CONFIRMED

*#0033# + Send : Set Language to French CONFIRMED

*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED

*#0039# + Send : Set Language to Italian CONFIRMED

*#0044# + Send : Set Language to English CONFIRMED

*#0049# + Send : Set Language to German CONFIRMED

*#0066# + Send : Set Language to Thai CONFIRMED

*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED

*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED

*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normal <tested by me>)

மேலும் வாசிக்க

Monday, 16 March 2015 by Unknown · 0

ஷஹீதிற்கு கிடைக்கும் ஆறு உயர் அந்தஸ்துகள்.

ஷஹீதிற்கு கிடைக்கும் ஆறு உயர் அந்தஸ்துகள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷஹீதிற்கு (உயிர்தியாகி) ஆறு சிறப்புகள் வழங்கப்படுகிறது.
1. அவருடைய இரத்தத்தில் முதல் சொட்டு (பூமியில் விழும் போதே) அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.
2. சொர்க்கத்தில் அவருடைய இருப்பிடம் காட்டப்படுகிறது.
3. ஹூருல் ஈன்களை அவருக்கு மணமுடித்து வைக்கப்படும்
4. மாபெரும் திடுக்கத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுகிறார்.
5.கியாமத் நாள் வரும்வரை மண்ணறை வேதனையிலிருந்தும் அவர் பாதுகாக்கப்படுகிறார்.
6.ஈமான் என்ற ஆடை அவருக்கு அணியப்படுகிறது.

அறிவிப்பாளர்: கைஸ் ஜுதாமீ (ரலி) நூல்: அஹ்மத் (17115)

by Unknown · 0

நற்செயலில் சிறந்தது?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக! 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நற்செயல்களில்" அல்லது "நற்செயலில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் - 140.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Sunday, 15 March 2015

அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் - 41:36)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 15 March 2015 by Unknown · 0

Saturday, 14 March 2015

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
(அல்குர்ஆன் - 41:33)
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 14 March 2015 by Unknown · 0

Friday, 13 March 2015

ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.

(அல்குர்ஆன் - 35:6)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Friday, 13 March 2015 by Unknown · 0

Thursday, 12 March 2015

நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானவை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக! 
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
(அல்குர்ஆன் - 21:47)
'(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி - 7563.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 12 March 2015 by Unknown · 0

Wednesday, 11 March 2015

மன்னிப்பு வழங்குவாயாக!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். 
என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது
 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி - 834)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 11 March 2015 by Unknown · 0

Tuesday, 10 March 2015

தண்டனை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக! 

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
'மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?' என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?' என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.
புகாரி - 6788.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 10 March 2015 by Unknown · 0

Sunday, 8 March 2015

பிரார்த்தனை - 1

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

.இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்க" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது.

(பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
(முஸ்லிம்  - 5289)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 8 March 2015 by Unknown · 0

Saturday, 7 March 2015

நிலையான நற்செயல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
'நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் '(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே' என்று விடையளித்தார்கள். மேலும், 'நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்' என்றும் கூறினார்கள்.
புகாரி - 6465.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 7 March 2015 by Unknown · 0

Friday, 6 March 2015

உறுதிப்படுத்துதல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல்குர்ஆன் - 49:6)

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Friday, 6 March 2015 by Unknown · 0

Thursday, 5 March 2015

பிரார்த்தனை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். 'அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு' என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
புகாரி - 6338.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 5 March 2015 by Unknown · 0

Wednesday, 4 March 2015

அநியாயக்காரன்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக! 

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.
(அல்குர்ஆன் - 32:22)
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 4 March 2015 by Unknown · 0

Monday, 2 March 2015

இறுதி நபியின் பரிந்துரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி - 6304.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 2 March 2015 by Unknown · 0

Sunday, 1 March 2015

நன்றி செலுத்துங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

  இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
14:6. மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.

14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

14:8. மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 1 March 2015 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program