Friday, 4 July 2014
'நான் நோன்பாளி!"
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்
விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு
விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1903.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!" என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1904.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ 'நான் நோன்பாளி!" ”
Post a Comment