Saturday, 3 January 2015

வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி?


வைபை வசதி மூலம் வயர் இல்லாமல் கணினி, லாப்டாப் மற்றும் மொபைல்களில் இன்டெர்நெட் பயன்படுத்த முடியும். இது பலருக்கும் வசதியாக இருப்பதால் இன்று அனைவரும் வைபை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். சிலர் அஜாக்கிரதையாக இருப்பதால் வைபை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது.

கவலை வேண்டாம் பிரச்சனைகளை சந்திக்காமல் பாதுகாப்பாக இன்டெர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு  வைபையை பாதுகப்பது எப்படி என்று பாருங்கள்..

ரவுட்டர் செட்டிங்ஸ்
முதலில் வயர்லெஸ் ரவுட்டர் செட்டிங்ஸ் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களது வெப் ப்ரவுஸரில் '192.168.1.1' என டைப் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் மற்றும் அதற்கான பாஸ்வேர்டை சரியாக கொடுக்க வேண்டும்.

பாஸ்வேர்டு
லாக் இன் செய்த பின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும், இம்முறை சற்று வித்தியாசமான பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும்.

நெட்வொர்க் SSID பெயர் பரவலாக இந்த பெயர் டீபால்ட் அல்லது ரவுட்டர் நிறுவனத்தின் பெயர் தான் இருக்கும். இது பாதுகாப்பாக இருக்காது, இதனால் நெட்வொர்க் SSID பெயரை மாற்றுவது நல்லது.

நெட்வொர்க் மறையாக்கம்
உங்களது நெட்வர்க்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க நெட்வொர்க்கை மறையாக்கம் செய்வது நல்லது. இதன் மூலம் உங்களது வைபை நெட்வர்க் இருப்பது வேறு யாருக்கும் தெரியாது.

MAC முகவரி
வைபை பயன்படுத்தும் மொபைல்கள் மற்றும் அனைத்து கருவிகளுக்கும் ப்ரெத்யேக MAC முகவரி இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் கருவிகளின் MAC முகவரிகளை மட்டும் உங்களது வைபை ரவுட்டரில் பதிவு செய்யுங்கள். அதன்பின் நீங்கள் பதிவு செய்த முகவரி கொண்ட கருவிகளில் மட்டும் தான் உங்களது வைபையை பயன்படுத்த முடியும்.

வயர்லெஸ் சிக்னல்
நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டர் அதிக தூரம் சிக்னல் இருந்தால் உங்களுக்கு தேவைப்பட்ட சுற்றளவு வரை வைபை சிக்னலை குறைக்க வேண்டும்.

ரவுட்டர் ஃபர்ம்வேர் அப்டேட்
சீரான இடைவெளியில் உங்களது ரவுட்டரை அப்டேட் செய்ய வேண்டும். தற்சமயம் பயன்படுத்தும் ஃபர்ம்வேரின் நிலையை ரவுட்டரின் டேஷ்போர்டில் பார்க்க முடியும்.

மேற்கண்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் உங்களது வீட்டு வைபையை உங்களை தவிற வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

http://tamil.gizbot.com/how-to-2/how-secure-your-wi-fi-home-network-008569.html

0 Responses to “ வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி? ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program