Sunday, 21 June 2015

புழுவெட்டு

புழுவெட்டு.....!!!
*
*
*

புழுவெட்டு எனும் நோய் முடி இருக்கும் இடங்களில் வட்ட வட்டமாக முடியை உதிரச்செய்யும் நோயாகும்.
*
தலைமுடி, மீசை, தாடி மற்றும் புருவ முடிகளைக் கூட தாக்கும் இயல்புடையது. ஆரம்பத்தில் சிறிய பொட்டு போல உருவாகி, நாணய வடிவாகி, பரவி உடலிலுள்ள அனைத்து முடிகளையும் உதிரச் செய்யும் தன்மையுடயது.
*
புழுவெட்டிற்கு மருந்தாக கை வைத்தியமாக குணபாடம் மூலிகை நூலில் கூறியபடி, சிறிய வெங்காயம் இரண்டு, மிளகு இரண்டு, கல்லுப்பு ஒரு சிட்டிகை மூன்றையும் அம்மியில் அரைத்து, புழுவெட்டு பாதித்த இடத்தில் தடவி வர, இரண்டு நாட்களில் வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும்.
*
அந்நிலையில் மேற்கண்ட கலவையை பூசவதை ஒரு நாள் நிறுத்தி விட்டு மறு நாள் முதல் மீண்டும் பூசவும். முடி முளைக்கும் வரை மேற்கண்ட கலவையை பூசுவதும் சொரசொரப்பு வந்தவுடன் நிறுத்திப் பின் மறு நாள் பூசுவதையும் தொடரவேண்டும். ஐந்தாறு நாட்களில் முடி முளைக்கத் தொடங்கும். முதலில் பூனை முடி போல முளைக்கத் தொடங்கி, பின் இயல்பான முடியாக சில வாரங்களில் முளைத்து விடும்.
*
முடி முளைக்கத் தாமதப்படும் போது அவ்விடத்தில் கரிசாலை மடக்குத் தைலம் தேய்த்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும். அதே போன்று மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தால் உள் மருந்தாக இரசகந்தி மெழுகை காலை மாலை ஒரு மாதம் உண்டு வர விரைவில் நலம் பெறலாம்.
*
*
“கலிங்காதி தைலம்"
*
கலிங்காதி தைலம் மகளிர் நோய்களான சூதகக்கட்டு, சூதகத் தடை, சூதகக் கிருமிகளுக்கு உள்ளுக்கு வழங்கப்படும் தைலமாக பல காலமாக பயன்பாட்டில் உள்ளதாகும். அதில் சேரும் சரக்குகளான வெங்காயச்சாறு, வெள்ளைப் பூண்டுச் சாறு, மலை வேம்புச் சாறு, எலுமிச்சைச்சாறு, வரிக் குமட்டிச்சாறு போன்ற அனைத்துச் சரக்குகளுமே புழுவெட்டிற்காக வெளிப்புறமாக பூசுவதற்கென தனத்தனியாக நூற்களில் கூறப்பட்டிருக்கிறது.
*
நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் இந்த தைலத்தை வெளி பிரயோகமாக, புழுவெட்டால் பாதிக்கப்பட்ட மீசை, தாடி, தலை, கண்புருவத்தில் தினசரி தடவி வந்தால் ஒரு மாதத்தில் மீண்டும் முடி செழித்து வளரும்.
*
*
*
நன்றி:- 
 Baskar Jayaraman(முகநூல்)

0 Responses to “ புழுவெட்டு ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program