Monday, 28 December 2015
Monday, 28 December 2015 by Unknown · 0
Thursday, 24 December 2015
> சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
> என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
> காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு
கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
> கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
> பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
> சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
> அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
> பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
> கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
> குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
> மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
> கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
> அழுவதும்... அணைப்பதும்...
> கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
> இடைகிள்ளி... நகை சொல்லி...
> அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
> இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
> எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
> என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
> கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
> 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
> 2 வருடமொருமுறை கணவன் ...
> நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
> இது வரமா ..? சாபமா...?
> அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
> கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
> நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
> நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
> திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
> விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
> தேவை அறிந்து... சேவை புரிந்து...
> உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
> தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
> வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
> இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
> இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
> பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
> தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
> எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
> இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
> விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
> பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
> நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
> அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
> விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
> பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
> பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
> வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
> ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
> உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
> விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
> கிழித்துவிடு!
> விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
> (இல்லையேல் விவாக ரத்து
Thursday, 24 December 2015 by Unknown · 1

✿✿✿+++++++++++++++++++++++✿✿✿++++++++++++++++++++++++✿✿✿
நீங்கள் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவீர்களா? இல்லையெனில், இன்றிலிருந்து பின்பற்ற ஆரம்பியுங்கள். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். தற்போது பற்களைத் துலக்க ஏராளமான டூத்பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன. இவற்றில் எதை வாங்குவது சிறந்தது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்போம்.
ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்!
பெரும்பாலான டூத்பேஸ்ட்டுகளில் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புளூரைடு மற்றும் டைட்டானியம்-டை-ஆக்ஸைடு போன்றவை இருக்கும். எனவே டூத்பேஸ்ட் வாங்கும் போது இவை உள்ளதாக என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். என்ன தான் பார்த்து வாங்கினாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்குவது போன்று வராது. அதிலும் காலங்காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்கள் வெண்மையாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!! வேப்பங்குச்சியைப் போன்று வேறு ஏதேனும் உள்ளதா என்று கேட்கலாம். நிச்சயம் உள்ளது. இங்கு அந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து அவற்றைக் கொண்டு உங்கள் பற்களை பராமரித்து பயன் பெறுங்கள்.
by Unknown · 0
Tuesday, 22 December 2015
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை அதிகமாகும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே உடல் பருமனாக உள்ளவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம். மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
Tuesday, 22 December 2015 by Unknown · 0
ஷாம்புக்குத் தடை!
===================================
உயிர்க் கொல்லியான கொடிய
கூடிய இரசாயனக் கலவை
கண்டுபிடித்ததைத் தொடர்ந்து
நிறுவனத்தின்
இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு
கத்தார் அரசாங்கம் தடைவிதித்
துள்ளது. அத்துடன் இந்த
தடை தற்காலிகமானதல்ல,
அது நீடிக்கும் என்றும் கத்தார்
சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக்
கூட பிரிவின்
தலைமை அதிகாரி டாக்டர்.
ஸைஃப்
அல் குவைரி தெளிவுபட
கூறியுள்ளார்.
ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன
தயாரிப்பான இருவகை ஹெட் &
ஷோல்டர் ஷாம்பூக்களில்
புற்று நோயை உண்டு பண்ணக்
கூடிய “டயோக்சைடு” எனும்
இரசாயனப் பொருள்
அனுமதிக்கப்பட்ட அளவை விட
கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டதால் தான்
கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த
நடவடிக்கையை மேற்கொண்
டுள்ளது.
அழகு சாதனங்களின் மீதான
மக்களின் மோகத்தை மூலதன
மாக்கி நுகர்வோரை ஈர்க்கும்
நோக்கில், சகல விதமான தார்மீக
நெறிமுறைகளையும் மீறி & அபாய
கரமான பின்விளைவுகளை பற்றிக்
கூட கிஞ்சிற்றும் கவலைப்
படாமல்தான் பெரும்பாலான
இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள்
தங்களின் தயாரிப்புகளை கவர்ச்
சிகரமான விளம்பரங்களுடன்
சந்தைப்படுத்தி வருகின்றன.
விளக்கை நோக்கி பாய்ந்து வீழ்
ந்து மடியும் விட்டில்களைப் போல,
மக்கள் அழகு மோகத்தால்
இயற்கை அழகையும்
ஆரோக்கியத்தையும்
கெடுத்து பாழ்படுத்திக்
கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும்
ஆட்பட்டு வருகின்றனர்.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத
அரசாங்கங்களும், அதிகாரிகளும்
யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன
என்கிற போக்கில் தங்களின்
வருவாயில் மட்டுமே குறியாக
உள்ளனர்.
எதிர்பாராத வகையில் ஏதேனும்
திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால்
ஒழிய இத்தகைய மென்விஷப்
பொருட்களின் உற்பத்தி &
வினியோகம் &
பயன்பாடு பற்றியெல்லாம் எவரும்
கவலைப்படுவதில்லை என்பதுதான்
வேதனைக்குரிய விஷயமாகும்.
எனவே, சமூக நலனில்
அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற
விஷயங்களிலும் கவனம்
செலுத்தி மக்களுக்கு
விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்,
மக்களும் விழிப்படைய வேண்டும்.
by Unknown · 0

✿✿✿++++++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++++++✿✿✿
குளிர்காலம் என்பதால் சளி, காய்ச்சல் போன்றவற்றால் நிறைய அவஸ்தைப்படுவோம். இப்படி சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இப்பிரச்சனையை மோசமாக்கும். அதற்கு சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவற்றைத் தவிர்க்கவும் வேண்டும். இங்கு சளி பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கவனமாக இருங்கள்.
by Unknown · 0
Friday, 18 December 2015
Friday, 18 December 2015 by Unknown · 0
by Unknown · 0
✿✿✿++++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++++++✿✿✿
பெரும்பாலும் நாம் ஏலக்காய்யை மனமாக இருக்க பிரியாணி சமைக்கும் போதும், பண்டிகை காலங்களில் இனிப்புகள் சமைக்கும் போதும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால், ஏலக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக மழைக் காலத்தில் ஏற்படும் சளி, தொண்டை தொற்று போன்றவைக்கும் இது நல்ல பயனளிக்கிறது. மேலும், ஏலக்காய் நெஞ்சு வலி, ஆண்மை மற்றும் பெண்மை குறைவுக்கும் அருமருந்து என சில ஆயுர்வேத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இனி, அன்றாட உணவில் ஏலக்காய், சில பயனுள்ள மருத்துவ பயன்கள் பற்றி காணலாம்.
by Unknown · 0
Sunday, 13 December 2015
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
__________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
__________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
Sunday, 13 December 2015 by Unknown · 0
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
.......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news
by Unknown · 0
✿✿✿++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++✿✿✿
சமீப காலமாக க்ரீன் டீ மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் நிறைய ஆராய்ச்சிகள், க்ரீன் டீ புற்றுநோயைத் தடுக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சொன்னது தான். அதுமட்டுமின்றி, சில ஆராய்ச்சிகள் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள். காபி, பால் டீயை விட க்ரீன் டீ ஆரோக்கியமானது என்பதில்லை எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆனால் இது உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அத்தகையவர்களுக்காக தான் இக்கட்டுரை.
**********************************************
க்ரீன் டீயில் வைட்டமின்களான ஏ, பி, பி5, டி, ஈ, சி, கே, எச் மற்றும் செலினியம், குரோமியம், ஜிங்க், காப்ஃபைன், மாங்கனீசு போன்றவை வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, க்ரீன் டியில் EGCG என்னும் சேர்மமும் உள்ளது
*************************************************
உடல் சாதாரணமாகவே வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் தான் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் க்ரீன் டீ குடிக்கும் போது, உடலின் வெப்பமானது அதிகரிக்கப்படுகிறது. க்ரீன் டீயினால் உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம், அதில் உள்ள EGCG தான். இப்படி வெப்பம் அதிகமாவதால், கலோரிகளின் அளவு அதிகமாக எரிக்கப்படுகிறது. கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால், உடல் எடை வேகமாக குறைகிறது
********************
க்ரீன் டீயின் ஒரு கப்பில் 30 மி.கி காப்ஃபைன் உள்ளது. காப்ஃபைன் உடலின் ஆற்றலை தூண்டி, உடற்பயிற்சியில் நீண்ட நேரம் சிறப்பாக ஈடுபட உதவி, அதன் காரணமாக மறைமுகமாக உடல் எடையைக் குறைக்கிறது.
********************
ஆய்வு ஒன்றில், க்ரீன் டீ குடிக்காமல், வெறும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தவர்களை விட, தொடர்ந்து க்ரீன் டீ குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 15% அதிகமாக கொழுப்புக்கள் கரைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் க்ரீன் டீ குடிக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 3% கொழுப்புக்கள் தான் கரைக்கப்பட்டிருந்ததாம்.
******************************************************************
மேரிலாந்து மருத்துவ பல்கலைகழகமானது ஒரு நாளைக்கு 2-3 கப் க்ரீன் டீ குடிப்பது போதுமானது என்று பரிந்துரைக்கிறது. ஏனெனில் இதனால் ஒரு நாளைக்கு 240 முதல் 320 பாலிஃபீனால்கள் கிடைக்கும். இந்த பாலிஃபீனால்கள் ஒருவகையான தாவர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள். அதாவது இவை செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரித்து, உடல் எடை குறைய உதவும்.
****************************
க்ரீன் டீயை ஒரு நாளில் 2-3 கப்பிற்கு மேல் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் இதய துடிப்பை அதிகரித்து, தூக்கமின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, களைப்பு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
***************************************
க்ரீன் டீயை குடிக்க ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. அதிலும் உங்களுக்கு இதயம் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை இருந்தால், க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இப்பிரச்சனைகளுக்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, க்ரீன் டீ குடித்தால், அவை இடைவினைபுரியும்,
✿✿✿+++++++++++++++++++✿✿✿++++++++++++++++✿✿✿
((((((((நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்,,,))))))
((((((((***அன்புடன் உங்கள் நண்பன் கோசிபாபு***))))))))
by Unknown · 0
✿✿✿++++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++++++✿✿✿
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?
✿✿✿++++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++++++✿✿✿
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.
*********************************************************
நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
****************************
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
************************
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
***********************************************
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
***************
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். * காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்,,
✿✿✿++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++✿✿✿
((((((((நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்,,,))))))
((((((((***அன்புடன் உங்கள் நண்பன் கோசிபாபு***))))))))
✿✿✿++++++++++++++++++✿✿✿+++++++++++++++++++++✿✿✿
by Unknown · 0