Tuesday, 22 December 2015

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் கிருமிகள் தாக்காமல் தடுக்கிறது வெங்காயம்

வெங்காயம் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கிறது. இதனால் நமது உடலில் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். வெங்காயத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய வலிமை கிடைக்கிறது. வெங்காயம் நாம் அன்றாடம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவாகும். நிறையப் பேர் வெங்காயத்தை உணவில் சேர்த்து சமைத்தாலும் சாப்பிடும் போது ஒதுக்கிவிடுவார்கள். இது தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவு வெங்காயம் தான்....
1=பித்தம் குறையும் ,,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
2=தலைவலி குறையும்,,,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது.
3=ஆசனக் கடுப்பு,,
~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
4=வாய் சார்ந்த பிரச்சனைகள்,,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.
5=உடல் வலிமை,,,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை அதிகமாகும்
6=இதர நன்மைகள்,,,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே உடல் பருமனாக உள்ளவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம். மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
http://tamil.boldsky.com/health/food/2015/onion-helps-boostup-immune-system-009599.html

0 Responses to “ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் கிருமிகள் தாக்காமல் தடுக்கிறது வெங்காயம் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program