Tuesday, 14 June 2016

மாடித்தோட்டம் ஏன்?

கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. 'நானே வளர்த்ததாக்கும்'ங்கற பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும். எங்கவீட்ல வெண்டைக்காய் காய்ச்சுக்கிடந்தப்ப, பசங்க அதை பச்சையாவே சாப்பிடுவாங்க :-))
வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , பூ, காய்கறிகளை குழந்தைகளை பறிக்க வைப்பது என்பது நல்லதொரு பழக்கம்.

* வேம்பு, கொய்யா, மாதுளம்பழம் போன்ற மரங்களை உங்கள் வீட்டைச் சுற்றிலும் வளர்த்து வந்தால் பிற்காலத்தில் அவற்றால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

*
சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன.
*
நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது.

மண் தான் பிரதானம் ஏன் ?
வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணைஅள்ளிட்டு வந்து போடக்கூடாது. செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்துதொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு.

இதனால் என்ன பயன்
?
நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் அன்பளிப்புடன்... நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது. கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து வலுவாக்கின்றது. சுத்தமான காற்றை தருகின்றது. சத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து அழிந்து போகும் குருவிகள் இனத்திற்கு வீடு கொடுத்து நமக்கு புண்ணியமும் தருகின்றது. இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?
புதிதாக தொடங்க ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தேவை படலாம். செடிகள் நட்டு வளர ஆரம்பிக்க ஒரு மாதம் பிடிக்கும். டரஸ் கார்டனை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? நமது தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்தவுடன் ஒரு நாளுக்கு ஒரு மனி நேரம் செலவிட்டாலே போதும். அதுவும் அதிலேயே உடற்பயிற்சி, சுவாச பயிற்சி(சுத்தமான காற்றுடன்) எல்லாம் அடங்கி விடும்
ஒரு தோட்டத்திற்கான செலவு எவ்வளவு?
சுமாரக 3000 to 5000 ருபாய் செலவு செய்தால் தோட்டம் போடலாம். அதில் விதைகள், செடிகள், உரம், நுண்ணுட்ட சத்து, செரிவுட்டபட்ட மண், தொட்டிகள், எல்லாம் அடங்கும். ஆனால் முன்புகூறியது போல் உபயோகம் இல்லாத பொருள்களை எடுத்து கொண்டால் செலவு குறையும். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து படிபடியாய் பெரிதாக்கி கொள்வதும் நல்லது. உங்களது உழைப்பில் உருவாகும் செடிகளை பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் உங்கள் செலவை எண்ணி பெருமை கொள்ள வைக்கும். நிச்சயமாக் உங்களின் செலவையும், உழைப்பையும் விட அதிகமான பலன்களையே இந்த பச்சை செல்வம் கொடுக்கும்.
பூச்சிகொல்லிகள் தேவைப்படுமா?
பூச்சிகளிடமிருந்து காக்க நமது அடுப்பங்கரை குப்பையிலிருந்து செய்யும் உரமும், பஞ்ச கவ்யம் எனப்படும் மருந்துமே போதும்.(பஞ்ச கவ்யம் தயாரிப்பு தனியாக உள்ளது)
வீட்டுசெடிகளைக் காக்கும்முறை
பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.
மனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.
செடிகளைக் காக்கும் வேப்பம்இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.
இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை.
இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
வீட்டுக்குள் செடிப் பராமரிப்பு
வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்
காய்கறி தோட்டம் என் வீட்டில் ரெடி
பாலகனி வராண்டாவில் செடிகள் வைத்துள்ளேன் செடி வளர உபயோகம் செய்த கலவை - மண்புழு உரம் + மக்கிய தென்னை நரர் கழிவு + செம்மண் + மணல் .கத்தரி , தக்காளி மிளகாய் கீரை முதலியவை, அதன் வளர்ச்சியை தெரிவிக்கிறேன்
செடிகளை எங்கு வைக்கலாம்
பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும்



0 Responses to “ மாடித்தோட்டம் ஏன்? ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program