Wednesday, 21 May 2014

ஆத்மாவைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 21 May 2014 by Unknown · 0

பாஸ்வேர்ட் மறந்த, ஹாங்காகிய ஆண்ராய்டு போனை ரீசெட் எப்படி செய்வது?

vadakaraithariq.blogspot.com
நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

 ஹான்காகிய போனை ரீசெட் செய்யும் முறை

படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் ஆண்ராய்டு போனை பவர் பட்டன், வால்யூம் மேல் பட்டன், ஹோம் பட்டன் மூன்றையும் 
vadakaraithariq.blogspot.com
ஒரே நேரத்தில் 30 நொடிவரை அழுத்தி பிடிக்க வேண்டும். அப்போது போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்.

பாஸ்வேர்ட் மறந்த போனை ரீசெட் செய்யும் முறை

பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் மேலே உள்ள முறைப்படியும் ரீசெட் செய்யலாம், சில நேரம் அப்போதும் பாஸ்வேர்ட் கேட்கும். இப்போது இரண்டாவது வழியை மேற்கொள்ளலாம். *2767*3855# என்ற கோடை அழுத்தவும் போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்.

உங்கள் ஆண்ராய்போனின் பாட்டரியின் முழு தகவலும் அறிய வேண்டுமா, *#*#4636#*#* என்ற கோடை அழுத்தவும். பாட்டரி மட்டும் அல்லாமல் மொபைலின் முழு தகவலும் பெறலாம். 

டிஸ்கி -

மொபைலை ரீசெட் செய்யும் முன்பு எப்போதும் பேக்கப் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 

http://vadakaraithariq.blogspot.in/2013/09/blog-post.html

by Unknown · 0

Sunday, 18 May 2014

அல்லாஹ்வின் உதவி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

3:160. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.

3:173. மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 18 May 2014 by Unknown · 0

Friday, 16 May 2014

வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

மேலும் வாசிக்க

Friday, 16 May 2014 by Unknown · 0

Tuesday, 13 May 2014

இதயங்கள் அமைதி பெற ...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.

(அல்குர்ஆன் - 13:28-29)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 13 May 2014 by Unknown · 0

Sunday, 11 May 2014

சுவர்க்கத்தின் வழி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!   

92:5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

92:6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

92:7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

(அல்குர்ஆன் - 92: 5-7)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 11 May 2014 by Unknown · 0

Saturday, 10 May 2014

புதிய ஆன்ட்ராய்ட் பிரௌசர் அப்ளிகேஷன் Skyfire 4.0

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பிரௌசிங் செய்ய பயன்படும் Browser Apps - பிரௌசர் அப்ளிகேஷன்கள் பல உள்ளன. அவற்றில் Skyfire Browser சிறப்பாக செயல்படுகிறது. தற்போது இந்த அப்ளிகேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க

Saturday, 10 May 2014 by Unknown · 0

அல்லாஹ்வின் ரோஷம்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 
முஹம்மதின் சமுதாயமே!
தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக
ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.
முஹம்மதின் சமுதாயமே!
நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால்
குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி - 5221)

5222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை.
என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி - 5222)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி - 5223)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Friday, 9 May 2014

வீட்டு இன்டர்நெட் இணைப்பை, ஸ்மார்ட்போன்களுக்கு பகிர்வது எப்படி?

வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் இணைப்பை, உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தவாறே Tablet Pc, Android Smartphone போன்றவற்றிற்கு பகிர்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 

மேலும் வாசிக்க

Friday, 9 May 2014 by Unknown · 0

இரண்டு அருட்கொடைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி  விடுகின்றனர்.
1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(நூல்: புகாரி - 6412)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Thursday, 8 May 2014

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

(அல்குர்ஆன் - 94: 6-8)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 8 May 2014 by Unknown · 0

Wednesday, 7 May 2014

நற்கூலி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.

(அல்குர்ஆன் - 95: 4-6)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 7 May 2014 by Unknown · 0

Tuesday, 6 May 2014

அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
 
அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

“நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

(அல்குர்ஆன் - 49:17-18)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 6 May 2014 by Unknown · 0

Monday, 5 May 2014

மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

(அல்குர்ஆன் - 4:26 - 28)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 5 May 2014 by Unknown · 0

Saturday, 3 May 2014

இறைவன் மாபெரும் கொடையாளி.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

(அல்குர்ஆன் - 96:3-6)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 3 May 2014 by Unknown · 0

Friday, 2 May 2014

உறவைப் பேணி வாழ வேண்டும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும்
வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது
உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் - 4999. 

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Friday, 2 May 2014 by Unknown · 0

Thursday, 1 May 2014

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் - 4997.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 1 May 2014 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program