Saturday, 10 May 2014
அல்லாஹ்வின் ரோஷம்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
முஹம்மதின் சமுதாயமே!
தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக
ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.
முஹம்மதின் சமுதாயமே!
நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால்
குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி - 5221)
5222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை.
என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி - 5222)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி - 5223)
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ அல்லாஹ்வின் ரோஷம்: ”
Post a Comment