Saturday, 29 November 2014

ஜனாஸா தொழுகை


அஸ்ஸலாமு அலைக்கும்….
ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது மறந்திருக்கலாம்....
அவர்களுக்காக இந்தப்பதிவு.....
1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________
முதல் தக்பீர் கூறிய பின் ....
அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.
ஆதாரம்:- புகாரி, 1335
*****************************************
2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________
இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்.
”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
ஆதார நூல்:- பைஹகி ,4/39
**********************************************
3, 4. மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
அல்லாஹும்ம ஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்.
அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601.
பொருள்:- இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
_______________________________________
குறிப்பு:- இதை பகிர்ந்து மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள். மீண்டும் நினைவுபடுத்தவே இந்த பதிவை மீண்டும் பகிர்கின்றேன்...
_______________________________________
பட உதவி:- ஆளூர் ஷாநவாஸ்..
படம்:- கண்ணியம் மிகுந்த தலைவர் “காயிதே மில்லத்” அவர்களின் இறுதித் தொழுகையில் அன்றைய முதல்வர் “கலைஞர்”, “எம்.ஜி.ஆர்”, “மதியழகன்”, “க.அன்பழகன்”, “க.ராசாராம்” என ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தத் தொழுகையை வழி நடத்தியவர் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் “அப்துர் ரஹ்மான் பாஃபக்கி தங்கள்” அவர்கள்.

நன்றி: Mansur Ali

0 Responses to “ ஜனாஸா தொழுகை ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program