Wednesday, 22 July 2015

முட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட...

வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.
எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.
*
அதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது, படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும்.
*
அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்று விட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும்.
*
எனவே மூட்டைப்பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல், ஒரு சில பொருட்களைக் கொண்டு கொன்று விட்டால், அவை அழிந்து விடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றி விடலாம்.
*
மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்கள்
*
*
வினிகர்..
*
மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்து விடும்.
*
*
உப்பு ..
*
உப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக்கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சி அதிகம் உள்ள இடத்தில் அதன் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சிகள் இறந்து விடும்.
*
*
வெங்காயச் சாறு ..
*
நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.
*
*
டீ-ட்ரீ ஆயில் ..
*
டீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்து விடுவதோடு, இனி மேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.
*
*
லாவெண்டர் எண்ணெய் ..
*
லாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே இதனையும் பயன்படுத்திப் பாருங்கள்....
*
*
மண்ணெண்ணெய்
*
மண்ணெண்ணெய்யை "ஸ்ப்ரே" செய்தும் மூட்டை பூச்சிகளை ஒழிக்கலாம்...
*
*
நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்த இதனை பகிருங்கள்..
*
*
*
நன்றி:-கோசிபாபு.
Mullai Mansur Ali's photo.

0 Responses to “ முட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட... ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program