Tuesday, 14 June 2016
நடுநிலைமையைப் பேணுங்கள்.
னின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.
Tuesday, 14 June 2016 by Unknown · 1
ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும். பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம். குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும். தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட குழிகளை அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும்.
ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.
Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம்...
by Unknown · 1
வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , பூ, காய்கறிகளை குழந்தைகளை பறிக்க வைப்பது என்பது நல்லதொரு பழக்கம்.
by Unknown · 0
by Unknown · 0
by Unknown · 0
Saturday, 16 April 2016
Saturday, 16 April 2016 by Unknown · 0

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகளையும், செடி வளர்க்கும் பைகளையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
மாடித்தோட்டத்தில் சிறப்பு என்னவென்றால், பாரம்பர்ய விதைகளையும், வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், பழங்களையும் வளர்க்க முடியும். எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த அம்சங்கள் இருப்பதால்தான் மாடித்தோட்டம் மக்களின் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது.
இதை உணர்ந்து இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தை சேர்ந்த பொறியாளர் ராதாகிருஷ்ணன்.

இப்போது 6 வகையான அவரைக்காய்கள், நான்கு வகையான கத்திரிக்காய்கள் என்று பயிர் செய்கிறேன். பழங்களில் மாதுளை, தர்ப்பூசணி, பப்பாளியும், காய்கறிகளில் சுரைக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் என்றும் பயிர் செய்கிறேன். அம்மான்பச்சரிசி, பூனைமீசை, முடக்கத்தான், தவசிக் கீரை, ஆடாதொடா, மஞ்சள் கரிசலாங்கண்ணி, விபூதிபச்சிலை, மருதாணி, வெற்றிலை என மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறேன்.
கடந்த 8 ஆண்டுகளாக, எங்கள் இல்லத்தில் மார்க்கெட்டில் போய் காய்கறிகளை வாங்கி பயன்படுத்துவது இல்லை. அரிசி, பருப்பு, எண்ணெய் ஊரிலிருந்து வந்துவிடும். நான் இங்கே உணவுக்கு தேவையான கீரை, காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்கிறேன். மொத்தத்தில் எங்கள் குடும்பமே முற்றிலும் இயற்கையான மாடித்தோட்டத்தில் விளையும் காய்கறிகளை உண்டு வாழ்ந்து வருகிறோம்” என்றவர் தொடர்ந்தார்.

செடிகளில் நோய்த்தொற்றுகளை மட்டும் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டால் போதும். மாடித்தோட்டம் எளிமையான ஒன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் என் மனைவியும், குழந்தைகளும் கூட மாடித்தோட்டத்தை பாசமாக பார்த்து கொள்கிறார்கள். நான் கவனிக்காமல் விட்டாலும் அவர்கள் செடிகளின் நோய்த்தாக்குதலை கண்டுபிடித்து விடுவார்கள்.
செடிகளுக்கு தொட்டியை தயார் செய்யும்போது, மண்புழு உரம், தேங்காய் நார், வேப்பம் புண்ணாக்கு கலப்பேன். இந்த கலவையில் செடிகளை வைக்கும்போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். விளையும் காய்கறிகளும் இயற்கையானதாக இருக்கும். கட்டுமான தொழிலில் இருப்பதால் வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறேன். ஆர்வம் உள்ளவர்களுக்கு வீட்டில் தோட்டம் அமைக்கவும் உதவி செய்து வருகிறேன்" என்கிறார்.
http://www.vikatan.com/news/miscellaneous/62566-the-features-of-terrace-garden.art
by Unknown · 0
Tuesday, 19 January 2016
SHAMPOO:
AVERAGE NO. OF CHEMICALS: 15
MOST WORRYING CHEMICALS: Sodium Lauryl Sulphate, Tetrasodium and Prophylene Glycol
POSSIBLE SIDE EFFECTS: Irritation in Eyes and Head; Possible Eye Damage.
நாம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூக்களில் 15 விதமான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Sodium Lauryl Sulphate, Tetrasodium and Prophylene Glycol ஆகியவை.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: கண்களிலும் தலையிலும் எரிச்சல் மற்றும் கண்கள் சேதமடைய வாய்ப்பு.
AVERAGE NO. OF CHEMICALS: 26
MOST WORRYING CHEMICALS: Polythylene Terephthalate
POSSIBLE SIDE EFFECTS: Linked to Cancer; Infertility; Hormonal disruptions and Damage to the Body’s Organs.
கண் புருவ மை: இதில் 26 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polythylene Terephthalate ஆகும்.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: பெண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹோர்மோன்கள் சுரப்பதில் தடைகள், உடல் உறுப்புகள் பாதிப்பு, தோல் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
AVERAGE NO. OF CHEMICALS: 33
MOST WORRYING CHEMICALS: Polymenthyl Methacrylate
POSSIBLE SIDE EFFECTS: Allergies; Linked to Cancer
லிப்ஸ்டிக்: இதில் 33 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polymenthyl Methacrylate ஆகும்.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: ஒவ்வாமை, புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்
AVERAGE NO. OF CHEMICALS: 31
MOST WORRYING CHEMICALS: Phthalates
POSSIBLE SIDE EFFECTS: Linked to Fertility Issues and Problems in Developing Babies.
நக மேற்பூச்சு: இதில் 31 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Phthalates ஆகும். இதை பயன்படுத்துவதால் பெண்கள் கருத்தரிப்பதிலும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்புகள் ஏற்படும்.
AVERAGE NO. OF CHEMICALS: 250
MOST WORRYING CHEMICALS: Benzaldehyde, Benzyl Alcohol, Benzyl Acetate
POSSIBLE SIDE EFFECTS: Irritation to Mouth, Throat and Eyes; nausea (Feel like a patient, incomfortability); Linked to Kidney Damage.
Perfume (நறுமண தைலம்): இதில் 250 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Benzaldehyde, Benzyl Alcohol, Benzyl Acetate ஆகும். மற்ற அழகுசாதன பொருட்களை விடவும் Perfume பயன்படுத்துவது மிகவும் தீமையானது. இதை பயன்படுத்துவதால்
1. கண்கள், வாய், தொண்டை போன்ற இடங்களில் எரிச்சல் இருக்கும்.
2. சிறுநீரகம் பழுதடைய வழிவகுக்கிறது.
3. பயன்படுத்துபவர்கள் எந்த நேரமும் அசாதாரண நிலையிலேயே காணப்படுவார்கள்.
AVERAGE NO. OF CHEMICALS: 22
MOST WORRYING CHEMICALS: Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben
POSSIBLE SIDE EFFECTS: Rashes; Irritation; Hormonal(Thyroid) Disruption.
தோல் ரோமம் நீக்கி(Fake tan): இதில் 22 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் (Thyroid) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
AVERAGE NO. OF CHEMICALS: 11
MOST WORRYING CHEMICALS: Octinoxate, Isophthalates
POSSIBLE SIDE EFFECTS: Allergies; Irritation to Eyes, Nose and Throat; Hormone Disruption, Linked to Damage in Cell Structure.
இதில் 11 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Octinoxate, Isophthalates ஆகும். இதை பயன்படுத்துவதால் ஒவ்வாமை, கண், மூக்கு, தொண்டை பகுதிகளில் எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். உடலின் செல்கள் பழுதடைய வழிவகுகிறது.
AVERAGE NO. OF CHEMICALS: 16
MOST WORRYING CHEMICALS: Ethylparabens, Methylparaben, Prophylparaben
POSSIBLE SIDE EFFECTS: Rashes; Irritation; Hormonal Disruptions
இதில் 16 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
AVERAGE NO. OF CHEMICALS: 24
MOST WORRYING CHEMICALS: Polymethyl Methacrylate
POSSIBLE SIDE EFFECTS: Allergies; Disrupts Immune System; Links to Cancer.
இதில் 24 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polymethyl Methacrylate ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும்.
AVERAGE NO. OF CHEMICALS: 15
MOST WORRYING CHEMICALS: Isoprophyl Myrislate, ‘Parfum’
POSSIBLE SIDE EFFECTS: Irritation to Skin, Eyes; lungs problem; headaches; Dizziness; Respiratory Problems.
இதில் 15 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Isoprophyl Myrislate, ‘Parfum’ ஆகும். இதை பயன்படுத்துவதால் தோளில், கண்களில் எரிச்சல்; நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் பிரச்சனைகள்; பலவிதமான தலைவலிகள், மயக்கம் ஏற்படும்.
AVERAGE NO. OF CHEMICALS: 32
MOST WORRYING CHEMICALS: Polyethylene Glycol, Which is also found in Oven Productions, Methylparaben, Prophylparaben
POSSIBLE SIDE EFFECTS: Rashes; Irritation; Hormonal Disruptions
இதில் 32 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது, Polyethylene Glycol (Microwave oven தயாரிப்பதில் பயன்படுவது) Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
MOST WORRYING CHEMICALS: 1,4-dioxane
POSSIBLE SIDE EFFECTS: Leads to Cancer
குழந்தைகளுக்கான ஷாம்பூவில் மிருதுதன்மைகாக 1,4-dioxane இருக்கிறது. அது குழந்தைகளுக்கு புற்றுநோய் வர வழிவகுக்கிறது.
தலைமுடியை நேராகவும் மிருதுவாகவும் ஆக்கும் கிரீம்களில் FORMALDEHYDE (Methylene Glycol) பயன்படுத்தபடுகிறது. அது புற்றுநோய்க்கான ஆராய்ச்சிகளில் புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருளாக பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் ஏற்படுத்துகிறது.
Beauty parlor களில் pH Adjuster ஆக பயன்படும் LITHIUM HYDROXIDE இனபெருக்க திசுக்களை பாதிக்கிறது.
பெண்கள் சாதரணமாக கண்களுக்கு பயன்படுத்தும் காஜல் ஈயம், அலுமினியம், அண்டிமோனி ஆகியவற்றால் உருவாக்கபடுவது. அதை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கற்றல் மற்றும் நடத்தை பிரச்சனைகள், அனிமியா, சிறுநீரக பிரச்சனைகள் என பல ஏற்படும்.
Carcinogenic COAL TAR ingredients in dark hair dyes.
ஹேர்டையில் பயன்படுத்தும் P-phenylenediamine புற்றுநோயை தூண்டுவது.
அழகு பொருட்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் Preservative அனைத்துமே உடலின் வளர்ச்சி, இனபெருக்கம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை பாதிக்கும்.
1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.
2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் ஆப்ரிக்க, தென்அமெரிக்க நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.
எல்லாம் அவன் செயல்! அவனின்றி ஒரு அணுவும் அசையாது! எல்லா புகழும் இறைவனுக்கே!
மேலும் உடல்நலம் பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பெற:
எனது முகநூல் notes பக்கம்:https://www.facebook.com/gdharan1/notes
நண்பர் கார்த்திகேயன் அவர்களது notes பக்கம்:https://www.facebook.com/rkacu/notes
Tuesday, 19 January 2016 by Unknown · 0
உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.


++++++++++++++
செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

++++++++++++
செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.
+++++++++++++++++
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.
+++++++++++++++++++
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.
++++++++++++
முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளல் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

+++++++++++++++
தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.
+++++++++++++++++
இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.
++++++++++++++++++++++++
மாட்டிறைச்சி என்றாலே சிலர் அறவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம்.
++++++++++++++
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.
++++++++++++++++++++++++++
தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.
++++++++++++++++
தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++
உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.
++++++++++++
அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.
++++++++++++++
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது சிறந்தது.
http://tamil.boldsky.com/health/food/2013/13-healthy-foods-a-thyroid-diet-002743.html
by Unknown · 0
Sunday, 17 January 2016
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
Sunday, 17 January 2016 by Unknown · 0