Sunday, 31 March 2013
Sunday, 31 March 2013 by Unknown · 0
Saturday, 30 March 2013
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்ஆன் - 8:20)
(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
(அல்குர்ஆன் 2:130)
Saturday, 30 March 2013 by Unknown · 0
Thursday, 28 March 2013
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883.
Thursday, 28 March 2013 by Unknown · 1
by Unknown · 0
Wednesday, 27 March 2013
Wednesday, 27 March 2013 by Unknown · 0
பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
(அல் குர்ஆன் – 11:114)
நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.(அல் குர்ஆன் – 16:128)
'எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்' (என்று கூறினோம்).
(அல் குர்ஆன் – 20:82)
by Unknown · 0
நாம் பிளாக்கரில் பல்வேறு வசதிகளை விட்ஜெட்களாக உருவாக்கி பிளாக்கரில் இணைத்து இருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் ஒரு பயனுள்ள விட்ஜெட்டை எப்படி பிளாக்கரில் இணைப்பது என பார்ப்போம். இந்த Subscribe விட்ஜெட்டில் ஈமெயிலில் பதிவு செய்யும் வசதி மட்டுமின்றி சமூக தளங்களின் பட்டன்களும் சேர்த்து உள்ளது. அது மட்டுமில்லாமல் எத்தனை பேர் ஈமெயில் வாசகர்களாக உள்ளனர் என காட்டும் Feed Count பட்டனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆக Email Subscribe, Social Networks, Feed Count என அனைத்தும் ஒரே விட்ஜெட்டில் இருப்பதால் இதற்க்கு என தனித்தனி விட்ஜெட் வைக்க தேவையில்லை.
by Unknown · 0

ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை திரட்டிகளிலும், சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான ட்விட்டர் தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் ட்விட்டரில் தானாகவே அப்டேட் ஆகும் படி செய்வது என பார்ப்போம்.
by Unknown · 0
உங்கள் பேஸ்புக் கணக்கில் Account Settings என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கே இடதுபுறம் Timeline and Tagging என்பதை க்ளிக் செய்யுங்கள்.
by Unknown · 0

by Unknown · 0
பதிவுகளை பிரபல படுத்த நாம் பல முறைகளை கையாளுகிறோம். முக்கியமானது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது இன்னொன்று சமூக இணைய தளங்களில் இணைப்பது. இந்த தளங்களின் ஓட்டு பட்டைகளை ஏற்க்கனவே பிளாக்கில் இணைத்து இருப்போம். ஆனால் அவைகளை தனித்தனியே இணைத்து இருப்போம் ஆதலால் அவை ஒழுங்கற்று இருக்கும். ஆகவே பிரபல சமூக தளங்களின் ஓட்டு பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.
by Unknown · 0
Monday, 25 March 2013
உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க
Monday, 25 March 2013 by Unknown · 0
Sunday, 24 March 2013
(நபியே!) நீர் கூறுவீராக:
வாருங்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு எதைத் தடை செய்துள்ளான் என்பதைச் சொல்லிக்காட்டுகிறேன்.
(அதாவது) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது.
பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும்.
வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யக் கூடாது.
உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அப்பட்டமான (அல்லது) மறைமுகமான எந்த மானக்கேடான செயல்களையும் நெருங்காதீர்கள்.
அல்லாஹ் புனிதப்படுத்திய எந்த உயிரையும் தகுந்த காரணமின்றிக் கொலை செய்யாதீர்கள்.
இதையே அவன் உங்களுக்கு அறிவுரையாகக் கூறுகின்றான்.
(இதனால்) நீங்கள் விளக்கமுடையோர் ஆகலாம்.
அல்அன்ஆம் 6:151
Sunday, 24 March 2013 by Unknown · 0
"மாற்ற நினைத்தேன், மாறி விட்டேன்"
யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.
மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...
இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்
யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).
by Unknown · 2
Saturday, 23 March 2013
அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைபிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகக் செல்வங்களில் மிகவும் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம் 2668)
வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும்
தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)
Saturday, 23 March 2013 by Unknown · 0
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),
நூல் : முஸ்லிம் 4870.
”மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871.
by Unknown · 0
Friday, 22 March 2013
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் 23:1)
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 3:104)
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)
Friday, 22 March 2013 by Unknown · 0
புறம் பேசுதல் என்றால் என்ன என்றங்களுக்கு தெரியுமா? அதற்கு அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்றோம். அதற்கு அவர்கள் உங்களது சகோதரர் வெறுக்கும் வண்ணம் அவரைப் பற்றி பேசுவதாகும் என்றார்கள். அவரிடம் இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால் என்னவாகும் என்று கேட்கப்பட்டதற்கு 'அது அவரிடம் இருந்தால் நீ புறம்பேசியவனாவாய்; அது அவரிடம் இல்லாத பட்சத்தில் அவதூறு பேசியவனாவாய்' என்றார்கள். - முஸ்லிம் 6265, 2589.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.49:12.
by Unknown · 0
Thursday, 21 March 2013
”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)
Thursday, 21 March 2013 by Unknown · 0