Wednesday, 27 March 2013
பேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க

தற்போது ஃபேஸ்புக் தளம் தனது போட்டியாளரான கூகுளினை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது.
இந்த தளத்தில் பகிரப்படும் பகிர்வுகள் பல தவறானவைகளாகவே உள்ளது. மேலும் ஆபாசமான செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறன. அதற்கும் மேலாக நம்முடைய சுயதகவல்கள் திருடப்படுகிறன என்பது மிகவும் வருத்தம் அளிக்ககூடிய ஒன்றாக உள்ளது.
இதனால் பலர் தங்களுடைய ஃபேஸ்புக் கணக்கினை நீக்க முடிவு செய்துள்ளனர். ஃபேஸ்புக் கணக்கில் இருந்து விருப்பதேர்வினை பயன்படுத்தி நீக்க முயன்றால் நம்முடைய தகவல்கள் மறைக்கபடுமே தவிர, நம்முடைய கணக்கு முழுமையாக நீக்கப்படமாட்டாது.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று ஃபேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும் அதில் Delete my account என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் கொடுக்கப்பட்டுள்ள அடையாள சொற்களை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது.
ஆனால் நீங்கள் ஃபேஸ்புக் கணக்கினை நீக்கும் முன் அதில் உள்ள தகவல்களை நகல் எடுத்து வைத்து கொள்ளவும். நீங்கள் செய்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழையக்கூடாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே ஃபேஸ்புக் கணக்கு நீக்கம் செய்யப்படும்.
நன்றி:http://www.onlytamil.in
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க ”
Post a Comment