Wednesday, 27 March 2013
நற்செயல்கள்
நற்செயல்கள்:
பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
(அல் குர்ஆன் – 11:114)
நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.(அல் குர்ஆன் – 16:128)
'எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்' (என்று கூறினோம்).
(அல் குர்ஆன் – 20:82)
வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள். மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்கமாட்டார்கள். சோர்வடையவுமாட்டார்கள்.
(அல் குர்ஆன் – 21:19)
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
(அல் குர்ஆன் – 41:38)
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை. ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
(அல் குர்ஆன் – 41:49)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களால் இயன்ற அளவுக்கே அமல்களை-நற்செயல்களை செய்யுங்கள், ஏனெனில் அல்லாஹ் சோர்வடைவதில்லை; நீங்கள் தான் சோர்ந்து போவீர்கள்."
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி)
நூல்: மிஷ்காத்,புஹாரி 1970.

|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ நற்செயல்கள் ”
Post a Comment