Wednesday, 25 December 2013
(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக.
யார் இறைநம்பிக்கை கொண்டு தம் இறைவனை (முழுமையாக)ச் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள்மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
(அல்குர்ஆன்: 16:98,99)
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
Wednesday, 25 December 2013 by Unknown · 0
Monday, 23 December 2013
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

“உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்:
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம், வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, வமின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
(இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலும் இறக்கும்போது ஏற்படும் சோதனையிலிருந்தும், மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்)
என வேண்டுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1030.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
Monday, 23 December 2013 by Unknown · 0
Sunday, 22 December 2013
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

நிச்சயமாக அல்லாஹ், இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோரை (சொர்க்க)ச் சோலைகளில் நுழையச்செய்வான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்கிறான்.
(அல்குர்ஆன்: 22:14)
Sunday, 22 December 2013 by Unknown · 0
Saturday, 21 December 2013
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஸஹீஹ் முஸ்லிம், பாகம்:4 ஹதீஸ் எண்: 5050.
Saturday, 21 December 2013 by Unknown · 0
Friday, 20 December 2013
Friday, 20 December 2013 by Unknown · 0
Sunday, 15 December 2013
Sunday, 15 December 2013 by Unknown · 0

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
by Unknown · 0

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல்குர்ஆன் - 3:200)
by Unknown · 0
Friday, 6 December 2013
Friday, 6 December 2013 by Unknown · 0
Monday, 2 December 2013
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1145.
அஸ்வத் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்,இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்துக் குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்படுவார்கள்' என்று விடையளித்தார்கள்.
நூல்: புகாரி - 1146.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
Monday, 2 December 2013 by Unknown · 0
Sunday, 1 December 2013
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
கிப்லாவை முன்னோக்குதல்:
2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
Sunday, 1 December 2013 by Unknown · 0