Monday, 23 December 2013

பாதுகாப்புக் கோருங்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

“உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்: 

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம், வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, வமின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

(இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலும் இறக்கும்போது ஏற்படும் சோதனையிலிருந்தும், மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்)

என வேண்டுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1030.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ பாதுகாப்புக் கோருங்கள்: ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program