Tuesday, 21 January 2014

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.
(அல்குர்ஆன்: 40:59)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 
Tuesday, 21 January 2014 by Unknown · 0

Sunday, 19 January 2014

நேர்வழி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
(அல்குர்ஆன்: 26:78)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 19 January 2014 by Unknown · 0

ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்லாஹ் அல்லாதவற்றை (அல்லாஹ்வுக்கு) இணைகளாக ஆக்கி, அல்லாஹ்வை நேசிப்பதைப் போன்று அவற்றை நேசிப்போரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால், இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை (மட்டுமே) ஆழமாக நேசிப்பவர்கள் ஆவர். அநீதி இழைத்தோர் (கண்கூடாக) வேதனையைக் காண்பார்களாயின், ‘ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன’ என்பதையும், ‘அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்’ என்பதையும் அப்போது அறிந்துகொள்வார்கள்.

(அல்குர்ஆன்: 2:165)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி - 6044.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சுவைக்கக்கூடியதே.

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சுவைக்கக்கூடியதே. பரிசோதனைக்காகத் தீமை மற்றும் நன்மை மூலம் உங்களை நாம் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் - 21:35)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Saturday, 11 January 2014

பொறாமை கொள்ளாதீர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தன் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் - 5001.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 11 January 2014 by Unknown · 0

Friday, 10 January 2014

அல்லாஹ் நன்கறிந்தவன்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்லாஹ் (தன்னுடைய கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி (உங்கள் குற்றங்களை மன்னித்து) உங்கள் மீது அன்பு புரிவதையே விரும்புகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் - 4:26)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Friday, 10 January 2014 by Unknown · 0

அல்லாஹ்வுக்கோ உயர்ந்த தன்மை உண்டு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

மறுமையை நம்பாதவர்களுக்குக் கெட்ட தன்மைதான் உண்டு; அல்லாஹ்வுக்கோ உயர்ந்த தன்மை உண்டு. அவன் வல்லமை படைத்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான். 

(அல்குர்ஆன்: 16:60)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Sunday, 5 January 2014

இறைநம்பிக்கை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

ஆணாயினும் பெண்ணாயினும் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை நாம் இனிதான வாழ்க்கை வாழச்செய்வோம்; அவர்கள் செய்துவந்த நன்மைக்கான பிரதிபலனை நிச்சயமாக அவர்களுக்கு நாம் வழங்குவோம்.
(அல்குர்ஆன்: 16:97)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 
Sunday, 5 January 2014 by Unknown · 0

Friday, 3 January 2014

விதண்டாவாதம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

நிச்சயமாக இந்த குர்ஆனில் நாம் மனிதர்களுக்கு எல்லா எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனால்,) மனிதனோ அதிகமாக விதண்டாவாதம் புரிபவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 18:54)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Friday, 3 January 2014 by Unknown · 0

வெள்ளிக்கிழமையின் சிறப்பு:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் - 1547.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Wednesday, 1 January 2014

பிறரை திட்டக்கூடாது

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது.
என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 6045.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 1 January 2014 by Unknown · 0

சிறந்தது எது?'

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?'' என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் - 63.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program