Tuesday, 29 April 2014

உலக விசயத்திற்காக சண்டையிடுதல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்)என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள்... கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்.

நூல்: புகாரி - 1344.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 29 April 2014 by Unknown · 0

Monday, 28 April 2014

படைப்புகளில் மிக மேலானவர்கள்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

(அல்குர்ஆன் - 98:7-8)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 28 April 2014 by Unknown · 0

Sunday, 27 April 2014

உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

82:10. நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

82:11. (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.

82:12. நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

82:13. நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 27 April 2014 by Unknown · 0

Saturday, 26 April 2014

நேர்வழி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 26 April 2014 by Unknown · 0

Thursday, 24 April 2014

முழுமையான இறைநம்பிக்கையாளர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி - 13.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 24 April 2014 by Unknown · 0

Tuesday, 22 April 2014

இஸ்லாத்தில் சிறந்தது எது?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 10.

'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 11.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Tuesday, 22 April 2014 by Unknown · 0

Monday, 21 April 2014

நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்!

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும்
அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த 
முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் - 5122)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 21 April 2014 by Unknown · 0

Sunday, 20 April 2014

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 
23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

23:4. ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 20 April 2014 by Unknown · 0

Saturday, 19 April 2014

மாமனிதர் நபிகள் நாயகத்தின் நீதி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி - 6788.

மேலும் வாசிக்க

Saturday, 19 April 2014 by Unknown · 0

Friday, 18 April 2014

அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் - 4:149)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Friday, 18 April 2014 by Unknown · 0

Thursday, 17 April 2014

குழப்பம் உண்டாக்காதீர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்
கு மிக சமீபத்தில் இருக்கிறது.

(அல்குர்ஆன் - 7:56)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 17 April 2014 by Unknown · 0

Tuesday, 15 April 2014

மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம்:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி(ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், 'முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்' என்றார்.
உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.
நூல்: புகாரி - 6088. 

மேலும் வாசிக்க

Tuesday, 15 April 2014 by Unknown · 0

Monday, 14 April 2014

அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் - 5:2)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 14 April 2014 by Unknown · 0

Sunday, 13 April 2014

நாங்கள் முஃமின்களாக இருப்போம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
(அல்குர்ஆன் - 6:27)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 13 April 2014 by Unknown · 0

Saturday, 12 April 2014

அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக
அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக
இருக்கின்றான்.

(அல்குர்ஆன் - 59:18)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 12 April 2014 by Unknown · 0

Wednesday, 9 April 2014

பிரார்த்தனை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)
(நூல்: முஸ்லிம் - 5265)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 9 April 2014 by Unknown · 0

Monday, 7 April 2014

யாவரும் சகோதரர்களே!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
(அல்குர்ஆன் - 49:10)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Monday, 7 April 2014 by Unknown · 0

Sunday, 6 April 2014

முஃமின்களே நண்பர்கள் !

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
(அல்குர்ஆன் - 4:144)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Sunday, 6 April 2014 by Unknown · 0

Saturday, 5 April 2014

முனாஃபிக்குகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை,
காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி
தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு
வழியையும் நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன் - 4:143)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Saturday, 5 April 2014 by Unknown · 0

Thursday, 3 April 2014

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் - 6:11)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Thursday, 3 April 2014 by Unknown · 0

Wednesday, 2 April 2014

சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”

(அல்குர்ஆன் - 26:85)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை 
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

Wednesday, 2 April 2014 by Unknown · 0

Tuesday, 1 April 2014

அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகா எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் - 5:100)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 
Tuesday, 1 April 2014 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program