Sunday, 18 August 2013

அல்லாஹ்விடம் கையேந்துவோம்!(பிரார்த்தனை - 1)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.     



இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்:
59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

பாவமானதைக் கேட்கக்கூடாது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!' என்று கேட்கட்டும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 5671.

வலியுறுத்திக் கேட்க வேண்டும்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். 'அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு' என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 6338.

அவசரப்படக் கூடாது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 6340.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ அல்லாஹ்விடம் கையேந்துவோம்!(பிரார்த்தனை - 1) ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program