Sunday, 25 August 2013

நியாயத் தீர்ப்பும் மனித நேயமும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  
 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்பு கேட்டார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை.

உடனே அவர், '(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூஸாவைக் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!" என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார்.
உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, 'நபி(ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?' என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'அபுல் காசிம் அவர்களே! (என் உயிர்) உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?' என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, 'நீ ஏன் இவரின் முகத்தில் அறைந்தாய்?' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகிற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, 'அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ('ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டதீர்கள்.

ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூஸா(அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கெண்டிருப்பார்கள். ' அவர்கள் 'தூர்சினாய்' மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?' என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி - 3414.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ நியாயத் தீர்ப்பும் மனித நேயமும் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program