Wednesday, 28 August 2013

நண்பர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.   


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 13.

'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 16.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 3336.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 
1. நீதிமிக்க ஆட்சியாளர். 
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 
5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 
6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.
7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 6806. 

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கும் குறைஷிகளுக்கும் இடையே மதீனாவில் இருக்கும் என் வீட்டில் வைத்து நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.
நூல்: புகாரி - 7340. 

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ நண்பர்கள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program