Thursday, 20 August 2015

தொழுகையை நிலை நிறுத்துங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
       இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 
30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
30:31. நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்..
30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
யா அல்லாஹ் ! குப்ரைவிட்டும், வறுமையை விட்டும் கப்ருடைய வேதனையை விட்டும் உன்பால் பாதுகாவல் தேடுகிறோம் ! நல்வழியையும் பயபக்தியையும் , தூய எண்ணங்களையும் செல்வங்களையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ தொழுகையை நிலை நிறுத்துங்கள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program