Saturday, 29 August 2015

தண்டுக் கீரை

பயன்மிக்க கீரை வகையில் ஒன்றான தண்டுக் கீரையை,
நமது வீட்டில் வளர்க்கலாமே !

கீரைகளில் தண்டும் கீரையும் தனித்தனியாக சமையல்களில் பயன்படுத்துவது தண்டுக்கீரையை மட்டும்மான். ஆனால் தண்டுக்கீரை ஆடி மாதங்களில் மட்டுமே மார்க்கெட்டுகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை 1 முதல் 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். தண்டுக்கீரை அறுவடைக்கு கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அதனால் வியாபார நோக்கத்தில் அது உதவாது. அதனால்தான் ஆடிமாதங்களில் கூழ் சமைக்கும்போது கூட சமைக்கப்படும் காரக்குழம்பில் போடுவதற்காக தண்டுக்கீரை விற்பனை செய்கிறார்கள். ஆனால் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்க ஏற்றக் கீரை வகையில் இதற்கு முதலிடம் தரலாம். சிறுகீரை,முளைக்கீரை உள்ளிட்ட கீரைகள் முளைத்து வளர்ந்தவுடன் அறுவடை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இவற்றின் பயன்பாடு ஒரே ஒரு முறை மட்டுமே. இலைகளைக் கிள்ளிக் கொண்டு, தண்டை விட்டால் பெரிதாக இலைகள் முளைத்து பயன்தராது. ஆனால் நன்கு வளர்ந்த தண்டுக்கீரை இலைகளை பறித்துக் கொண்டு, தண்டை மட்டும் விட்டால் ஒரே வாரத்தில் இலைகள் முளைத்து செழித்து வளர்ந்து நிற்கும். இப்படி ஒரே செடியில் ஆறு முறைக்கும் குறையாமல் இலைகளைப் பறிக்கலாம். தண்டுக்கீரையின் இலைகள் பெரிதாக இருக்கும் என்பதால் நான்கைந்து செடிகள் வைத்தாலே போதுமானது. 3 பேர் அடங்கிய குடும்பத்திற்கு வாரம் ஒரு முறை தண்டுக்கீரை மசியல் செய்யுமளவிற்கு தண்டுக்கீரைச் செடியில் அறுவடை செய்யலாம்.

என்னென்ன தேவை? : நல்ல மண், உரமிட்ட தொட்டி, தண்டுக்கீரை விதைகள்
எப்படி விதைப்பது? : தண்டுக்கீரை விதைகளை வாங்கி, மண் உரமிட்ட தொட்டிகளில் விதைத்தால் இரண்டு நாட்களில் விதைகள் முளைவிட ஆரம்பித்திருக்கும். ஒரே மாதத்தில் அவை செடிகளாக வளர்ந்து பலன் தரர ஆரம்பிக்கும்.
பராமரிப்பு : காலை, மாலை மிதமான தண்ணீர் ஊற்றினால் போதும். போதிய வெளிச்சம் இருப்பது நலம்.
அறுவடை: முதல் மாதத்திலிருந்து இலைகளை மட்டும் பறிக்கலாம். அடுத்த இரண்டு மாதத்திற்கு வாரம் ஒரு முறையென இலைகளைப் பறிக்கலாம்

0 Responses to “ தண்டுக் கீரை ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program