Saturday, 29 August 2015

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு

சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!

உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள்,

ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை,

தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா?

உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க

அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்புங்க

அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய தொலைபேசி எண்:

9789006492, 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு

நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். பண்ணுங்க:

[PDS] ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு]

அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்].

இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு

அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும்.

(படத்தைப் பார்க்கவும்)

0 Responses to “ ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program