Monday, 23 September 2013

விசுவாசிகள் - 1

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

23:80. அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

23:81. என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.

23:82. (அதாவது:) "நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப் படுவோமா?" என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்.

23:83. (அன்றி) "நிச்சயமாக நாமும் நம்முடைய மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதையே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்.)

23:84. (ஆகவே நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "பூமியும் அதில் உள்ளவைகளும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்" எனக் கேளுங்கள்.

23:85. அதற்கவர்கள் "அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேளுங்கள்.

23:86. அன்றி "ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?" என்று கேளுங்கள்.

23:87. அதற்கவர்கள் "யாவும் அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் அவனுக்கு பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள்.

23:88. அன்றி "எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக்) கூறுங்கள்" எனக் கேளுங்கள்.

23:89. அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) "அல்லாஹ்வுக் குரியதுதான்" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?" என்று கேளுங்கள்.

23:90. நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதனை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ விசுவாசிகள் - 1 ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program