Tuesday, 24 September 2013

அல்லாஹ் மிக்க மேலானவன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

23:91. அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.

23:92. அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவைகளை விட அல்லாஹ் மிக்க மேலானவன்.

23:93. "என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்,

23:94. என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்.

23:95. ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உங்களுக்குக் காண்பிக்கவும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றோம்.

23:97. அன்றி "என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்.

23:98. என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ அல்லாஹ் மிக்க மேலானவன். ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program