Thursday, 8 October 2015

30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்!!!

30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்!!!
இந்தியாவில் ஏராளமான மக்கள் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது. சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்!!! ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று. உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்!!! உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?
1=கேரட்,,
~~~~~~
கேரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும்.
2=மீன்,,
~~~~~~
மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும். எனவே வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
3=ஆலிவ் ஆயில்,,
~~~~~~~~~~~~~~~~~~
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்
4=பிரட்,,
~~~~~~
பொதுவாக வெள்ளை பிரட் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் தானியங்களால் செய்யப்படும் பிரட்டை உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் மெதுவாக நடைபெறுவதோடு, கலோரிகளும் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
5=சிட்ரஸ் பழங்கள்,,
~~~~~~~~~~~~~~~~~~
சிட்ரஸ் பழங்களில், ஆரஞ்சு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
6=பாதாம் ,,
~~~~~~~~~
பாதாம் நீரிழிவு நோயாளிகளின் நண்பன் எனலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது
7=க்ரீன் டீ,,
~~~~~~~~~
க்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
8=ஆப்பிள் ,,
~~~~~~~~~~~
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரையில் உள்ள ஏற்றத்தாழ்வையும் குறைக்கலாம்.
9=ஓட்ஸ் ,,
~~~~~~~~~
சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸை காலை உணவாக எடுத்து வருவது நல்லது. ஏனெனில் ஓட்ஸ் செரிமான நொதிகளுக்கும், உணவில் உள்ள ஸ்டார்ச்சுக்கும் ஒரு பாலாமாக விளங்கும். எப்படியெனில் ஓட்ஸை உட்கொள்ளும் போது, உணவில் உள்ள கார்போடிஹைட்ரேட்டை மெதுவாக உறிஞ்சி இரத்த சர்க்கரையாக மாற்றும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிப்பது ,

0 Responses to “ 30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்!!! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program