Tuesday, 6 October 2015
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்!
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானியின் ஆச்சரியமான உண்மை சம்பவம்......
*
*
அருமை நண்பர்களே.......!
*
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்......
*
*
*
அருமை நண்பர்களே.......!
*
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்......
*
*
இன்று எதுவென்றாலும் மருத்துவ மனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை.
*
"உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான்" என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
*
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
*
இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழில்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் உண்மை கதை.
*
மதுரையில் பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்று விட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
*
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின் தினமும் மூன்று முறை "பெரிடொனியல் டயாலிசிஸ்" (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார்.
*
அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
*
அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
*
பேராசிரியரும் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறுநீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வு தான் செய்தார்,
*
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
*
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன் மூலம் இரண்டே மாதத்தில் சிறு நீரக செயல்பாடு தினமும் 50 மில்லி லிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
*
*
"இஞ்சி ஒத்தடம்":-
*
இஞ்சி ஒத்தட முறை கீழே விரிவாக:-
*
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
*
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
*
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
*
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்து விட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
*
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
*
6. பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
*
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றி விட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
*
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
*
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
*
"பாதத்தின் நான்காம் விரல்":
*
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது.
*
அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழு மனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கி விடுவார் (மசாஜ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
*
*
"உணவு முறை"
*
சிறு நீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
*
"சோடியம்":- உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதேனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
*
"பொட்டாசியம், பாஸ்பரஸ்":- உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம். மேலும், காய்களை துண்டு துண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊற வைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்கலாம். பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
*
"புரதங்கள் (ப்ரோடீன்)":- புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள். எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஊற வைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
*
"நீர்":- நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல் பாட்டுக்கும் அதன் மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்தத்திற்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
*
*
"சேர்த்து கொள்ள வேண்டியவை"
*
"ஒமம்":- ஒம இலை சிறுநீரக செயல் பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
*
"புளி":- புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால் தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
*
"மஞ்சள்":- மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின் படியும், இக்கால அறிவியலின் படியும் நிருபிக்கபட்டுள்ளது.
*
"காய்கறிகள்":- பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
"பழங்கள்":- ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
*
"எண்ணெய்":- நல்லெண்ணெய், ஆலிவ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
*
"தவிர்க்க வேண்டியவை"
*
"காய்கறிகள்":- தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை தவிர்த்து கொள்ளவும்.
*
"பழங்கள்":- வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, உலர் பழங்கள் ஆகியவற்றை தவிர்த்து கொள்ளவும்.
*
இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
*
http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ
*
*
*
நன்றி:- adra.saka
https://www.facebook.com/mansurali.m?fref=nf
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்! ”
Post a Comment