Saturday, 10 October 2015

தொலைந்துபோன உங்கள் Android ஸ்மார்ட் போனின் IMEI நம்பரை கண்டறிவது எப்படி?


எமது ஸ்மார்ட் சாதனங்களில் இருக்கக் கூடிய IMEI Number எனப்படும் இலக்கங்களானது குறிப்பிட்ட சாதனம் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள உதவுவதுடன், அந்த சாதனம் தொலைந்துவிடும் சந்தர்பத்தில் குறிப்பிட்ட இலக்கங்களை வைத்து அந்த சாதனம் இருக்கும் இடத்தை கண்டறிந்து கொள்ளவும் உதவுகின்றது.

தொலைந்துபோன உங்கள் Android ஸ்மார்ட் போனின் IMEI நம்பர்

உங்கள் Android சாதனத்தில் *#06# என்பதை உள்ளிடுவதன் மூலம் இந்த IMEI நம்பரை கண்டறியலாம்.

எனினும் உங்கள் Android சாதனம் தொலைந்துவிடும் சந்தர்பங்களில் இதனை கண்டறிவதற்கு வழியும் உண்டு.

இதனை பின்வரும் வழிமுறையில் கண்டறியலாம் 

  • பின் கூகுளின் Dashboard பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு பின்வரும் இணைப்பை சுட்டுக.



கூகுள் Dashboard உள்நுழைவு பக்கம்


  • இனி தொலைந்த ஸ்மார்ட் சாதனத்தில் நீங்கள் பயன்படுத்திய உங்கள் கூகுள்கணக்கின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட்டு மேலே தரப்பட்ட கூகுள் Dashboard பக்கத்திற்குள் நுழைந்து கொள்க.

கூகுள் அமைப்புக்கள்

  • பின் அந்த பக்கத்தில் Android என்பதை கண்டறிந்து அதற்கு அருகில் இருக்கும் சிறிய அம்புக்குறி அடையாளத்தை சுட்டுக.
  • இனி நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களினதும் IMEI நம்பர் உட்பட அதன் இன்னும் சில விபரங்கள் பட்டியல்படுத்தப்படும்.

அவ்வளவு தான். இனி குறிப்பிட்ட IMEI நம்பரை வைத்து தொலைந்துவிட்ட உங்கள் ஸ்மார்ட் சாதனத்தை கண்டறியலாம்.


http://www.tamilinfotech.com/2015/10/How-To-Find-Recover-IMEI-Number-of-lost-Android-smart-phone.html

0 Responses to “ தொலைந்துபோன உங்கள் Android ஸ்மார்ட் போனின் IMEI நம்பரை கண்டறிவது எப்படி? ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program