Wednesday, 14 October 2015
மாடித் தோட்டம் பராமரிப்பு

மாடித் தோட்டம் பராமரிப்பு:
மாடித் தோட்டம் என்றால் அதற்கு ஊட்டம் (உரம்) வேண்டும். ஊட்டமாகசமையலறை கழிவுகளையே மட்கச் செய்து பயன்படுத்தலாம். பிண்ணாக்கு, அரிசி கழுவிய நீர், காய்கறிகள் கழுவிய நீர் வீட்டில் மீதமிருக்கும் இட்லி மாவுகளை பயன்படுத்தலாம். இட்லிமாவு புளித்திருந்தால் அவற்றில் சிறிதளவு சர்க்கரை (மண்டைவெல்லம்) சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
மாடித் தோட்டம் என்றால் அதற்கு ஊட்டம் (உரம்) வேண்டும். ஊட்டமாகசமையலறை கழிவுகளையே மட்கச் செய்து பயன்படுத்தலாம். பிண்ணாக்கு, அரிசி கழுவிய நீர், காய்கறிகள் கழுவிய நீர் வீட்டில் மீதமிருக்கும் இட்லி மாவுகளை பயன்படுத்தலாம். இட்லிமாவு புளித்திருந்தால் அவற்றில் சிறிதளவு சர்க்கரை (மண்டைவெல்லம்) சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
*******************************************
அதிக அளவு ஊட்டத்தை பயன்படுத்தும்போது பூச்சிகள் தோன்றும். அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அழிக்கக்கூடாது. அவற்றை கட்டுப்படுத்த
வேப்ப எண்ணெய், புங்கை எண்ணெய் சம அளவில் கலந்து அவற்றில் 25மில்லி எடுத்து 10லிட்டர் தண்ணீரில் கலந்து அவற்றுடன் சிறிதளவு காதிபார் சோப்பு கலந்து தெளிக்க வேண்டும்.
சீதாபழவிதை, வேப்பவிதை, மிளகாய் மூன்றிலும் தலா 200கிராம் எடுத்துக் கொண்டு அவற்றை அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு நாள்கள் ஊரவைத்து பின்னர் ஒரு லிட்டர் மருந்திற்கு 10லிட்டர் தண்ணீர் விட்டு தெளிக்க வேண்டும்.
வெள்ளை பூச்சி மற்றும் நசுவினிக்கு மைதா மாவு பசையுடன் வேப்ப எண்ணெய், புங்கை எண்ணெய் கலவையுடன் சிறிதளவு சீதாபழவிதை இடித்து ஊர வைத்து தண்ணீர் ஆகியவற்றை கலந்து நல்ல வெயில் வேளையில் செடி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
காய்புழுக்களை கட்டுப்படுத்த சீதாபழவிதை, தங்கஅரளிவிதை இவற்றை இடித்து தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊறவைத்து அவற்றுடன் காதிபார் சோப்பு சிறிதளவு கலந்து தெளிக்க வேண்டும்.
குறிப்பு:
**********
ஊட்டத்தை குளிர்ச்சியான மாலைவேளை அல்லது அதிகாலை வேலைகளிலும், பூச்சிவிரட்டியை நல்ல வெயில் பொழுதில் பயன்படுத்த வேண்டும்.
**********
ஊட்டத்தை குளிர்ச்சியான மாலைவேளை அல்லது அதிகாலை வேலைகளிலும், பூச்சிவிரட்டியை நல்ல வெயில் பொழுதில் பயன்படுத்த வேண்டும்.
செடிகள் நட்ட தொட்டிகளில் மூடாக்கிட வேண்டும். மூடாக்கிடுவதென்பது களைசெடிகள் மற்றும் இலைதழைகளைக் கொண்டு செடியைச் சுற்றி மூடுவதாகும்.மூடாக்கிடுவதினால் நீர் ஆவியாவதை 40% வரை குறைக்கலாம்.
வேர்பூச்சிக்கு வேப்பம்பிண்ணாக்கு, புங்கைபிண்ணாக்கும் கலந்த கலவையை வைத்து தண்ணீர் விட வேண்டும். புங்கைபிண்ணாக்கு கிடைக்காத பச்சத்தில் வேப்பம்பிண்ணாக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
பூக்கள் திரண்டகாய்களாக மாறுவதற்கும் அதிக காய்கள் பெறுவதற்கும் அயல் மகரந்த சேர்க்கை வழி தான் சிறந்தது. அதற்கு தேமோர் கரைசல் மிகவும் சிறந்ததாகும்.
தேமோர் கரைசல் தயாரிப்பதற்கு இரண்டு நாள்கள் புளித்த மோர் மற்றும் தேங்காய் தண்ணீர் இரண்டு நாள்கள் வைத்திருந்து அவற்றை சமவிகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது இந்த கலவை தேனீக்களை கவர்ந்திழுக்கும் எனவே தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுகின்றது.
காய்கனிகள், பழங்கள், தானியங்கள் கழுவும் நீரையும் ஊட்டமாக பயன்படுத்தலாம். புளித்த இட்லி, தோசை மாவுகளுடன் சிறிது வெல்லம் கலந்து ஊட்டமாக பயன்படுத்தலாம்.
வண்ண பூக்களுக்கு டேபிள் ரோஸ் என்று சொல்லக்கூடிய காட்டு ரோஜா செடிகளை உடைந்த மக்குகளில் வளர்த்து ஆங்காங்கே வைத்து விட்டால் மாடித்தோட்டம் மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கும்.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ மாடித் தோட்டம் பராமரிப்பு ”
Post a Comment