Tuesday, 30 April 2013

ஆன்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்


ஆன்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால்  நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற  மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.
அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.


android
நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது.


செல்லினம் டவுன்லோட் செய்ய

source : http://www.vadakaraithariq.blogspot.in/2012/12/blog-post_31.html

Tuesday, 30 April 2013 by Unknown · 0

Monday, 29 April 2013

Blogger இல்Table of content page உருவாக்குவது எப்படி?

நாம் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை நமது பிளாக்கில் எழுதி இருப்போம்.  அதற்கு பொருத்தமான லேபளையும் இட்டிருப்போம். இந்த குறித்த லேபளை கிளிக் செய்யும் போது அந்த லேபளையுடைய அனைத்து பதிவுகளின் பக்கங்களும் தோன்றும். இந்த குறித்த லேபளின் கீழ் அதிகமான பதிவுகள் இருப்பின் Older Post என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிட வேண்டியிருக்கும். இது நமது வாசகர்கள் தமக்கு  வேண்டிய பதிவுகளை தேடி படிப்பதற்கு சிரமமான காரியமாக இருக்கும்.

மேலும் வாசிக்க

Monday, 29 April 2013 by Unknown · 0

அக்கிரமக்காரர்கள்

                                                                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Sunday, 28 April 2013

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.


வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை 
அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மேலும் வாசிக்க

Sunday, 28 April 2013 by Unknown · 0

மாநபியின் அறிவுரைகள்


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர்.
1. ஆரோக்கியம். 2. ஓய்வு
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
புஹாரி - பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6412.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Saturday, 27 April 2013

மாநபியின் மகத்தான தீர்ப்புகள்

                                                 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்" என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்" என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். 'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2412.

மேலும் வாசிக்க

Saturday, 27 April 2013 by Unknown · 0

Friday, 26 April 2013

பிளாக்கின் லேபிளை டேக் (tag) போல காட்ட


உங்க பிலாக்கின் (லேபிள்) குறிச் சொற்களை நீங்கள் ஆட் ய கேட்ஜட்டில் எனேபிள் செய்து இருந்தால் அதை லிஸ்ட் (list)வியூவாகவோ அல்லது (cloud)கிளவுட் வியூ வாகவோ செய்திருப்பீர்கள் 
அதை இன்னும் அழகாக தனித்தனி டேக் (tag)போல காட்டலாம்.
அதற்கு கீழே உள்ள நிரலியை காபி பேஸ்ட் செய்து ஆட் ய கேட்ஜட் மூலம் சேர்க்கவும் 
அதற்கு முன்பு லேபில் ஆப்ஷனில்(cloud) கிளவுட் ஆப்ஷன் டிக் செய்திட வேண்டும்.

மேலும் வாசிக்க

Friday, 26 April 2013 by Unknown · 0

இணையத்தை அளவறிந்து பயன்படுத்த ...

இணைய இணைப்பை அளவிட மீட்டர் :

இணைய இணைப்பு நாம் பயன்படுத்திவருகின்றோம்.
ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்
படுததினோம் என பயந்துகொண்டே இருக்கின்றோம்.
இந்த சாப்ட்வேர் அந்த குறையை முற்றிலும்
நமக்கு நீக்கிவிடுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.(1 எம்.பிக்குள்தான இருக்கு)
இனி இதை இன்ஸ்டால் செய்யவும்.
உங்களுக்கு உங்கள் கணிணியின் நேரத்திற்கு அருகில்
சின்ன கம்யூட்டர் ஐ-கானுடன் வந்து அமர்ந்துகொள்ளும்.
இதை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்


இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

இறுதி வெற்றி இறையச்சமுடையவர்களுக்கே!


எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Thursday, 25 April 2013

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்


எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களி
ன் தாக்கம் சக்திமிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

முஹம்மது நபி சமயத்தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் மாபெரும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வுலகத்தின் இறுதி நாள் வரை இறைத் தூதராக இருக்கும் தகுதியை இறைவன் வழங்கியுள்ளான். மேலும் மனிதனால் செய்ய முடியாத பல அற்புதங்களையும் இறைவனின் உதவியால் செய்து காட்டியுள்ளார்கள். சிறந்த கல்வியாற்றலையும் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்களிடம் துளியும் கர்வமோ ஆணவமோ இருந்ததில்லை. மேலும் அதை வெளிப்படுத்தும் வண்ணம் தங்கள் செயலையும் அமைத்துக் கொள்ளவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ''ஏன் அழுகிறீர்கள்?'' என்றார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (4913).

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த அளவிற்கு மிக எழ்மையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (6072)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ''சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்: இப்னுமாஜா (3303)

'ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி! நான் அதைப் பெற்றுக் கொள்வேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2568)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ''நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ
நூல்: புகாரி (6247)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள்.
ஆகவே, அபூதல்ஹா (ர­லி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ''இதை ஏன் இப்படிச் செய்தாய்?'' என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ''ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?'' என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2768)

ஓர் அடக்கத்தலம் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!'' என்றார்கள். அதற்கு அப்பெண், ''என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல்அப்பெண் கூறினாள். அவர்கள் நபிகளார் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே நபியவர்களுக்குக் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை ''நான் உங்களை (யாரென) அறியவில்லை'' என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். ''பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வது தான்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1283).

Thursday, 25 April 2013 by Unknown · 0

Wednesday, 24 April 2013

மார்க்க அறிஞர்


அல்லாஹ்வின் அடியார்களில் மார்ககத்தை அறிந்தவர்கள் தான் அவனை அதிகமாக பயப்படுவார்கள் . (அல் குர்ஆன் 35:28)

அல்லாஹ் உங்களில் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும் மார்க்க அறிவை பெற்றவர்களுக்கும் அந்தஸ்த்துகளை உயர்த்துகிறான் . (அல்குர்ஆன் 58:11)

மேலும் வாசிக்க

Wednesday, 24 April 2013 by Unknown · 0

Tuesday, 23 April 2013

கூகுள் சர்ச்சில் ஆபாச தகவல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?


கூகுள் தளத்தில் எதையாவது தேடும்பொழுது சில நேரம் ஆபாச தகவல்கள் முன்வந்து நிற்கும். கல்லூரிகள், அலுவலகங்கள் என நண்பர்களுடன் தேடும்பொழுது இம்மாதிரி நிகழ்ந்தால், அது நமக்கு சங்கடத்தை ஏற்படுவத்துவதாகவே அமையும். இதுகூட பரவாயில்லை தோழியுடனோ அல்லது தங்கையுடனோ இருக்கும்பொழுது ஏதாவது ஆபாச தகவல்கள் கூகுள் நமக்கு காட்டிவிட்டால் என்னாகும்? இந்த சங்கடங்களை தீர்க்கவும் கூகுள் வழிவகை செய்கிறது.

மேலும் வாசிக்க

Tuesday, 23 April 2013 by Unknown · 0

Monday, 22 April 2013

மனிதாபிமானத்திற்கு சொர்க்கமே பரிசு

அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் - முஸ்லிம் 5011.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள் என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 3015.

மேலும் வாசிக்க

Monday, 22 April 2013 by Unknown · 0

Thursday, 18 April 2013

பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.!


சகோதரர்களே!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இந்த உலகில் நாம் வாழும் நாட்களில் யாருக்கும் அநியாயம் செய்யாமல்,முடிந்த வரை மற்ற மக்களுக்கு நன்மை செய்து வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.மீறி யாருக்காவது அநியாயம் செய்து விட்டால் அவர்கள் நமக்கெதிராக பிரார்திப்பதற்கு முன் நாம் அவர்களிடம் நடந்த தவருக்காக மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி மன்னிப்பை பெற்றுக் கொண்டால்தான் அல்லாஹ்வும் நம்மை மன்னித்து அருள் புரிவான் என்பதை நாம் அனைவரும் நம் மனதில் ஆழமாக பதிந்து கொள்வோமாக!

மேலும் வாசிக்க

Thursday, 18 April 2013 by Unknown · 0

Tuesday, 16 April 2013

மறுமையில் நிழல் கொடுக்கப்படும் மனிதர்கள்


Tuesday, 16 April 2013 by Unknown · 0

முகநூல் பதிவு


by Unknown · 0

Sunday, 14 April 2013

பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி?



நாம் பிளாக் ஆரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் பிளாகர் சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் நமது வலைபதிவில் உள்ள Posts, Template, Widgets என எல்லாவற்றையும் எப்படி BackUp எடுப்பது என்பதை பார்க்கலாம்.

Template Backup எடுப்பது எப்படி?

       Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template 'ஐ Backup எடுத்து கொள்ளலாம்.
இதில் Widgets 'களும் சேர்த்து Backup  எடுக்கப்படும் என நமக்கு தெரியும்.  ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள். 

மேலும் வாசிக்க

Sunday, 14 April 2013 by Unknown · 0

ஈமான்



எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் மனிதன் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Saturday, 13 April 2013

பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே. 
write protect pendrive

மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.

மேலும் வாசிக்க

Saturday, 13 April 2013 by Unknown · 0

Friday, 12 April 2013

பொறுமை - 4


7:87. “உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை – அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் – அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).
7:126. “எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்தித்தனர்.)

மேலும் வாசிக்க

Friday, 12 April 2013 by Unknown · 0

Thursday, 11 April 2013

பொறுமை - 3

4:12. இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ – இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் – (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

மேலும் வாசிக்க

Thursday, 11 April 2013 by Unknown · 0

Wednesday, 10 April 2013

பொறுமை - 2


2:235. (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

Wednesday, 10 April 2013 by Unknown · 0

Tuesday, 9 April 2013

பொறுமை - 1


2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

மேலும் வாசிக்க

Tuesday, 9 April 2013 by Unknown · 0

Monday, 8 April 2013

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதியதாக மொபைல் போன் (Mobile) வாங்கியிருப்பீர்கள். கூடவே புதிய SimCard -ம் வாங்கியிருப்பீர்கள். அதனால் உங்களுக்கு புதிய எண் கிடைத்திருக்கும். எடுத்தவுடனேயே அந்த எண் உங்களுக்கு நினைவுக்கு வராது. பல நாட்கள் பயன்படுத்திய பிறகுதான் நினைவுக்கு வரும்.

நண்பர்கள் யாருக்கேனும் அந்த எண்ணை கொடுக்க நினைத்தால் உடனடியாக எண் நினைவில் வராமல் போகும். அதுபோன்ற சமயங்களில் இந்த எளிய முறை உங்களுக்குப் பயன்படும்.

மேலும் வாசிக்க

Monday, 8 April 2013 by Unknown · 0

நம் பிளாக்கினை தேடியந்திரங்கள் அறிவதற்கு வசதியாக மாற்ற


நம்முடைய பதிவுகளை தமிழ் திரட்டிகளில் இணைத்து அதன் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் தமிழ் திரட்டிகளின் மூலம் நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும் தேடியந்திரங்களில்(SEO) மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன.
தேடியந்திரங்களின் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வந்தால் நம் பிளாக்கின் ரேங்க் விரைவாக உயரும். ஆகையால் நம் பதிவை தேடியந்திரங்கள் மூலம் அறியபடுவதர்க்கு ஏற்ற மாதிரி செய்வது நம் கையில் தான் உள்ளது.

மேலும் வாசிக்க

by Unknown · 0

பிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க


தினம் புது புது பதிவர்கள் புற்றீசல் போல கிளம்பி கொண்டே இருக்கின்றனர். எழுதவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வலைப்பதிவு தொடங்கி அதன் மூலம் பல நல்ல கருத்தக்களை கூறியும் யாருக்கும் என் பிளாக் தெரிவதே இல்லை அல்லது யாரும் என் பிளாக் பக்கம் வரவே இல்லை என்று நீங்கள் கவலை பட்டாலும் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் இணையம் என்பது உலகளவில் பரந்து விரிந்து உள்ளது.
இதில் நீங்கள் ஏதோ ஒரு ஊரில் ஒரு சிறிய பெட்டிக்கடையை திறந்து விட்டு யாரும் வரவே இல்லை என்று ஒப்பாரி வைத்தால் அதில் என்ன நியாயம் உள்ளது.  முதலில் உங்கள் பிளாக் உலகறிய செய்ய வேண்டும்.அந்த வேலையை தான் திரட்டிகள் மேற்கொண்டுள்ளன.

மேலும் வாசிக்க

by Unknown · 2

Sunday, 7 April 2013

விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க

வயது வித்தியாசமில்லாமல், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இணையம் மூலம் வீடியோ பார்க்க பயன்படுத்தும் தளம் யூடியூப்தான் (YouTube Video Website).

வகை வகையான வீடியோக்களை கொண்டுள்ள யூடியூப் தளத்தில் தினம்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் மேலேற்றப்படுகின்றன (YouTube). பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கை தாண்டும்.

Watch YouTube videos without ads

தற்கால விளம்பர யுகத்தில் விளம்பரமின்றி எந்த ஒரு பொருளும் விற்பதில்லை.. அதற்கு கூகிளின் யூடியூப் (Google YouTube) மட்டும் விதிவிலக்கா என்ன?

மேலும் வாசிக்க

Sunday, 7 April 2013 by Unknown · 0

பிளாக்கரில் - Open this link in a new window



நாம் பதிவில் அதற்கு சம்பந்தமான ஏதாவது லிங்க் கொடுப்பது வழக்கம். அப்படி லிங்க் கொடுக்கும் போது நம் வாசகர்கள் அதை க்ளிக் செய்தால் அது நம் பதிவின் விண்டோவிலேயே லோடு ஆகி வரும் நம் பதிவு மறைந்து விடும். இதன் மூலம் நம் வாசகர்களை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாசகர்களும் திரும்பவும் நம் பதிவிற்கு வரவேண்டுமென்றால் திரும்பவும் நம் URL கொடுத்தோ அல்லது BACK பட்டனை அழுத்தியோ வரவேண்டும். அப்படி வரும்போது நம் பிளாக் திரும்பவும் லோடு ஆகி வரும் இதனால் நம் வாசகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இதனை தவிர்க்கவே இந்த பதிவு.
நீங்கள் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து கொண்டு
  • DESIGN - EDITHTML - சென்று இந்த வரியை கண்டு பிடிக்கவும் <head>   
  • கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும். 
<base target='_blank'/>
உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.    


அவ்வளவு தான் கீழே உள்ள Save Template கிளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை SAVE செய்து கொள்ளுங்கள்.  இப்பொழுது உங்கள் தளம் வந்து நீங்கள் எந்த லிங்க்கில் க்ளிக் செய்தாலும் அடுத்த டேபிள் திறப்பதை காணுங்கள்.  
Source: http://www.vandhemadharam.com/2010/08/open-link-in-new-tab_09.html

by Unknown · 0

பிளாக்கர் கமென்ட்டில் Reply வசதி




வாசகர்கள் நெடுநாளாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Reply Comment வசதியை பிளாக்கர் தளம் அறிமுகபடுத்தியது.
உங்கள் டெம்ப்ளேட்டில் சில கொடிங்க்ஸ் சேர்ப்பதன் மூலம் இந்த வசதியை கொண்டு வரலாம் அது எப்படி என கீழே பார்ப்போம்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். Design - Edit Html சென்று உங்கள் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Expand Widget Template தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும். (Ctrl+F கொடுத்து தேடினால் சுலபமாக கண்டறியலாம்)
<b:include data='post' name='post'/>
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<b:include data='post' name='comments'/>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:include data='post' name='comments'/>
</b:if>
மேலே சிவப்பு நிறத்தில் காட்டி இருக்கும் கோடிங்கை மட்டும் அழித்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும். கவனம் முதல் வரியை ஒன்றும் செய்ய கூடாது சிவப்பு நிறத்தில் உள்ள கோடிங்கை மட்டும் நீக்கவும்.
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>

<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
</b:if>

  • மேலே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்த பிறகு SAVE TEMPLATE கொடுத்து மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். 
இப்பொழுது உங்கள் வலைப்பூவை திறந்து கருத்து பகுதியை ஓபன் செய்து பாருங்கள் இந்த வசதி சேர்ந்திருப்பதை காணலாம்.
Source :http://www.vandhemadharam.com/2012/01/reply.html

by Unknown · 0

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

பத்து ஏக்கர்… இருபது ஏக்கர் என்று இருந்தாத்தான் வருமானம் பார்க்க முடியும்கறதில்ல. முறையா திட்டமிட்டா… மூணரை ஏக்கர்ல இருந்தே முத்தான வருமானத்தைப் பாக்கலாம். என்னோட பண்ணையே அதுக்கு சரியான உதாரணம்” என்று தெம்போடு சொல்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்.

இரண்டு ஏக்கரில் நெல், உளுந்து, எள் சாகுபடி; அரை ஏக்கரில் மீன்குளம் கரையில் வாழை, தென்னை, தேக்கு, தீவனப்புல், பரங்கி, கீரை, காய்கறி நாற்றுகள்; இன்னொரு அரை ஏக்கரில் நெல்லியும் அதற்கு ஊடுபயிராக கீரை, வெண்டை, மிளகாய், கத்திரி, உளுந்து என ஜீரோ பட்ஜெட் முறையில் அசத்தலாக சாகுபடி செய்து வருகிறார் மகாலிங்கம்!

மேலும் வாசிக்க

by Unknown · 0

Friday, 5 April 2013

மகத்தான நற்கூலி


4:40 (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

மேலும் வாசிக்க

Friday, 5 April 2013 by Unknown · 0

Thursday, 4 April 2013

சோதனைகள்


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

சோதனைகள் :

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.
(குர்ஆன் - 12:87)

மேலும் வாசிக்க

Thursday, 4 April 2013 by Unknown · 0

Wednesday, 3 April 2013

உலக வாழ்கையில் செல்வம்

அல்லாஹ் தன் திருமறையில்

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)

மேலும் வாசிக்க

Wednesday, 3 April 2013 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program