Friday, 26 April 2013

இணையத்தை அளவறிந்து பயன்படுத்த ...

இணைய இணைப்பை அளவிட மீட்டர் :

இணைய இணைப்பு நாம் பயன்படுத்திவருகின்றோம்.
ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்
படுததினோம் என பயந்துகொண்டே இருக்கின்றோம்.
இந்த சாப்ட்வேர் அந்த குறையை முற்றிலும்
நமக்கு நீக்கிவிடுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.(1 எம்.பிக்குள்தான இருக்கு)
இனி இதை இன்ஸ்டால் செய்யவும்.
உங்களுக்கு உங்கள் கணிணியின் நேரத்திற்கு அருகில்
சின்ன கம்யூட்டர் ஐ-கானுடன் வந்து அமர்ந்துகொள்ளும்.
இதை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்


இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள். இருக்கும்.
அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய
தேதியை நிரப்பி கொள்ளவும். அடுத்துள்ள கட்டத்தில் Dont track
between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை
அமைத்துக்கொள்ளவும்.

அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்கையில்
உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு
அளவுகளை பார்த்துக்கொள்ளலாம். அளவுகளை எம்.பி .
அல்லது ஜி.பி.யில் பார்த்துக்கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் இந்த ஐ-கான் மீது வைத்து
லெப்ட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டொ ஓப்பன் ஆகும்.
இதில் அப்போதையஅளவு - இன்றைய அளவு
மற்றும் அந்த மாதத்தியஅளவினை எளிதில் பார்த்துக்
கொள்ளலாம்.உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள்
வரும். எனவேசெட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள்.

source: 
http://velang.blogspot.com/2009/12/blog-post.html


இணையம் பயன்படுத்துபவர்களுக்கு உள்ள முக்கிய கவலை -கொடுத்துள்ள இலவச அளவினை விட அதிகமாக பதிவிறக்கம் செய்துவிடுவோமோ-பில் தொகை அதிகமாக வந்துவிடுமோ என்கின்ற கவலை உண்டு. அன்லிமிடட் பிளான் வைத்துகொண்டு டவுண்லோடு செய்பவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு....?அவர்கள் கவலையை போக்கவே இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.  இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மொத்தம் 6 யுட்டிலிட்டிகள் உள்ளது.
.நமது இணைய இணைப்பின் வேகம்-அப்லோடு மற்றும் டவுண்லோடு-மற்றும் அப்லோடு - டவுண்லோடு செய்கின்ற டேட்டா அளவு.எவ்வளவு நேரம் இணைய இணைப்பை பயன்படுத்தினோம் - மாதம பிறந்து இதுவரை எவ்வளவு முறை பயன்படுத்தினோம் - இன்று எவ்வளவு முறை இன்டர்நெட் ஆன்செய்தோம் என புள்ளி விவரமாக அறிந்துகொள்ளலாம்.இன்டர்நெட்டால் நமக்கு எவ்வளவு ரூபாய் செலவாகின்றது என்று அறிந்துகொள்ள இதில் சினன செட்டிங்(ஒரு எம்.பிக்கு எவ்வளவு ரூபாய் என்று) செய்துவிட்டால் போதும்.நமது ஐ.பி முகவரியை அறிந்துகொள்ளலாம்.எந்த வகை இணைப்பு என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.இதில் உள்ள தனி தனி யுட்டிலிட்டிகள் மூலம் இதுவரை எத்தனை முறை இணையத்தை பயன்படுத்தினீர்கள் - எவ்வளவு எம்.பிகள் இதுவரை பயன்படுத்திஉள்ளீர்கள். எவ்வளவு அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்துள்ளீர்கள் என அறிந்துகொள்ளலாம்.
இதில் டைரியும் உள்ளது. வேண்டிய பெயர்விவரம் -முகவரி - டெலிபோன் - இ-மெயில் - பிறந்த நாள் மற்றும் திருமண நாள் குறிதது வைததுக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
உலக நேரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எவ்வளவு எம்.பி.நாம் பதிவிறக்கம் செய்கின்றோம் - பதிவேற்றம் செய்கின்றோம் என்கின்ற விவரம் குறிக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதை செட் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு மெசெஜ் உங்களுக்கு ஒவவொரு 10 எம்.பிக்கும் விண்டோவாக டிஸ்பிளே ஆகும். தேவையானவரை பதிவிறக்க அளவு வைத்து இணைப்பை துண்டித்துவிடலாம்.
நிலாவின் அளவுகளையும் தெரிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
டாக்ஸ்பாரில் உள்ள இதன் ஐ-கானை கிளிக செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான வசதிகளை இதன் மூலம் எளிதில் பெறலாம்.
இதன் மூலம எவ்வளவு பயன்படுத்தினோம் என்கின்ற அறிக்கையையும் நாம் பெறலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அறிக்கையை வேர்ட் மூலம் பிரிண்ட்டும் எடுத்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரில் உள்ள வசதிகளை பதிவின் நீளம் கருதி குறைந்த அளவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகளா...? பயன்படுத்தி பார்த்து நானே வியந்துபோனேன். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

source: 
http://velang.blogspot.com/2010/12/blog-post_06.html

 


0 Responses to “ இணையத்தை அளவறிந்து பயன்படுத்த ... ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program