Tuesday, 23 April 2013

கூகுள் சர்ச்சில் ஆபாச தகவல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?


கூகுள் தளத்தில் எதையாவது தேடும்பொழுது சில நேரம் ஆபாச தகவல்கள் முன்வந்து நிற்கும். கல்லூரிகள், அலுவலகங்கள் என நண்பர்களுடன் தேடும்பொழுது இம்மாதிரி நிகழ்ந்தால், அது நமக்கு சங்கடத்தை ஏற்படுவத்துவதாகவே அமையும். இதுகூட பரவாயில்லை தோழியுடனோ அல்லது தங்கையுடனோ இருக்கும்பொழுது ஏதாவது ஆபாச தகவல்கள் கூகுள் நமக்கு காட்டிவிட்டால் என்னாகும்? இந்த சங்கடங்களை தீர்க்கவும் கூகுள் வழிவகை செய்கிறது.


பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகள் தேடலிலும் ஆபாச தகவல்கள் வராமல் இருக்கவேண்டியதும் அவசியமே! இப்பொழுது கூகுள் தேடலில் இருந்து ஆபாச தகவல்கள் வராமல் லாக் செய்வது எப்படி என்பதை விளக்கியுள்ளோம். தகவல்கள் கீழே!

விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்யுங்கள். பின்னர் ஓரத்தில் இருக்கும் ஆப்ஷன்ஸ் பொத்தானை அழுத்துங்கள். கிடைக்கும் மெனுவிலிருந்து சர்ச் செட்டிங்ஸ் என்பதை தெரிவுசெய்க.
அதில் Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும்.

பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக லாக் ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு கூகுள் வழங்காது.

தன் பின்னர் கூகுள் சர்ச் பக்கத்தில் நீங்கள் லாக் செய்ததன் அடையாளமாக வண்ண பந்துகள் தோன்றும். நீங்கள் இதனை 'அன்லாக்' செய்ய மீண்டும் சர்ச் செட்டிங்ஸ் சென்று 'அன்லாக்' என்று மாற்றிவிடுங்கள். கூகுள் கண்டிப்பாக ஒரு சிறந்த தேடுபொறிதான்.

source : http://tamil.gizbot.com/

0 Responses to “ கூகுள் சர்ச்சில் ஆபாச தகவல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்? ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program