Monday, 8 April 2013

பிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க


தினம் புது புது பதிவர்கள் புற்றீசல் போல கிளம்பி கொண்டே இருக்கின்றனர். எழுதவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வலைப்பதிவு தொடங்கி அதன் மூலம் பல நல்ல கருத்தக்களை கூறியும் யாருக்கும் என் பிளாக் தெரிவதே இல்லை அல்லது யாரும் என் பிளாக் பக்கம் வரவே இல்லை என்று நீங்கள் கவலை பட்டாலும் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் இணையம் என்பது உலகளவில் பரந்து விரிந்து உள்ளது.
இதில் நீங்கள் ஏதோ ஒரு ஊரில் ஒரு சிறிய பெட்டிக்கடையை திறந்து விட்டு யாரும் வரவே இல்லை என்று ஒப்பாரி வைத்தால் அதில் என்ன நியாயம் உள்ளது.  முதலில் உங்கள் பிளாக் உலகறிய செய்ய வேண்டும்.அந்த வேலையை தான் திரட்டிகள் மேற்கொண்டுள்ளன.
திரட்டிகள் என்றால் என்ன :
திரட்டிகள் என்பதற்கு பதில் பதிவுகளின் சங்கமம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். உங்கள் பதிவுகளை உலகறிய செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரே வழி இந்த திரட்டிகளில் உங்கள் பதிவை இனைப்பது தான்.இங்கு தான் பதிவர்களின் அனைத்து பதிவுகளின் லிங்கும் இடம்பெறும் ஆகையால் இணையத்தில் உலா வரும் வாசகர்கள் உங்கள் பதிவின் தலைப்பு அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த லிங்க் கிளிக் செய்து உங்கள் தளம் வந்து படித்து செல்வார்கள். இந்த சேவையை தருவதில் முதலிடத்தில் உள்ளது  இன்ட்லி தளமே ஆகும்.  அடுத்த இடங்களில் தமிழ்மணம், தமிழ்10,உலவு,தமிழ்வெளி,திரட்டி, ஆகிய தளங்கள் உள்ளன. 

இன்ட்லி,தமிழ்10,உலவு Vote Button இணைக்க:


  • ஒவ்வொரு தளங்களும் அவர்களுக்கென்று தனிதனி Vote Button அவர்களின் தளத்தில் கொடுத்து உள்ளனர். அதை எப்படி நிறுவுவது என்றும் எளிதான விளக்கங்களுடன் கொடுத்து உள்ளனர்.
  • இருந்தாலும் அதை ஒவ்வொரு தளமாக சென்று இணைப்பது கடினமாக இருக்கும் என்பதால் முக்கியமான மூன்று Vote Buttons எப்படி ஒரே நேரத்தில் இணைப்பது என்று பார்ப்போம்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design- EditHtml - Expand Widget Template செல்லவும்- (இதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை ஒருமுறை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்)
  •  <data:post.body/>  இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும்.(Ctrl+F அழுத்தி வரும் கட்டத்தில் இந்த கோடிங்கை டைப் செய்தால் சுலபமாக கண்டுபிடிக்கலாம்)
  • கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து <data:post.body/>  இந்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும்.
<div>
<script type='text/javascript'> button=&quot;veri&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
<script type='text/javascript'>
submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>
<script type='text/javascript'>
submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>
<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>
</div>
  • சேர்த்ததும் கீழே உள்ள PREVIEW பட்டனை அழுத்தி வோட் பட்டன் சரியாக வந்துள்ளதா என உறுதி செய்து கொண்டு அதன் அருகே உள்ள SAVE TEMPLATEபட்டனை கிளிக் செய்யவும். 
    தமிழ்மண பதிவு பட்டையை நிறுவ 


    • தமிழ் திரட்டிகளுள் இன்ட்லிக்கு அடுத்தபடியாக உள்ள திரட்டி இந்த தமிழ்மணம். இந்த தளத்தில் இப்பொழுது மேம்படுத்தப்பட்ட பதிவு பட்டையை வெளியிட்டு உள்ளார்கள். அதை உங்கள் பிளாக்கில் நிறுவ 
    • உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளவும்.

    • Design- Edit Html - Expand Widget Template- சென்று இந்த வரியை கண்டு பிடிக்கவும்.
    • <data:post.body/> இந்த வரியை கண்டுபிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும். 
    <script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
    </script>
    <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
    <script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
    </script>
    </b:if>
    பேஸ்ட் செய்ததும் கீழே உள்ள Save Template என்ற பட்டனை அழுத்தி உங்கள் தமிழ்மண பதிவு பட்டையை சேமித்து கொள்ளுங்கள்.

    source : http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

    2 comments :

    1. அஸ்ஸலாமு அழைக்கும்

      சகோதரரே, இஸ்லாம் மட்டுமின்றி, தொழில் நுட்ப விசயங்களும் எழுதுகிறீர்கள் அல்ஹம்து லில்லாஹ். எல்லா வற்றிலும் மற்றவர் எழுதாத விசயங்களை எழுதுங்கள்.
      இந்த போஸ்டில் இருந்துதான், தங்கள் இணைய தொடாபு, அல்ஹம்துலில்லாஹ்
      வஸ்ஸலாம்
      அதிரை அன்புதாசன் .

      ReplyDelete
      Replies
      1. வ அலைக்கும் ஸலாம்.இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்.

        Delete

    Trafficmonsoon

    Share Up To 110 % - 10% Affiliate Program