Friday, 31 May 2013

வறுமை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .   

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

7:94. நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.

9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

30:33. மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தம் வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பான். அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்,) 'நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?' எனக் கேட்க அவன் 'ஆம்' என்பான். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்ப வில்லையா? எனக் கேட்டதும் அவன் 'ஆம்" என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி - 1413.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி - 1419.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருள்களைப்) பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்கு நீங்கள் கொடுங்கள். அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)" என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். நான் முன்பு கூறியதைப் போன்றே மூன்று முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியதைப் போன்றே "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்)" என்று மூன்று முறை என்னிடம் கூறினார்கள். பிறகு, "நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், அவரைவிட மற்றொருவர் என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றம் ஏதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகத்தில் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் - 236.

Friday, 31 May 2013 by Unknown · 0

Thursday, 30 May 2013

தூக்கம் பற்றி இஸ்லாம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .
 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்
ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும்.

படுக்கையை உதறி விட்டு,
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன் (படுக்கிறேன்). உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன் (எழுகிறேன்). என் உயிரை நீ  கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ  விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும்  பாதுகாப்பாயாக! (புஹாரி 5845)

தூங்கும் போது,
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன் (தூங்குகிறேன்), உன் பெயரால் உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்).
(புஹாரி 7395, முஸ்லிம் 4886)

தூங்கும் முன்,
இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.  (முஸ்லிம் 4887)

தூங்கி எழுந்ததும்,
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  (புஹாரி 6312, 6314, 6324, 6325, 7395)
 6:60. அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

28:73. இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

39:42. அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.

39:22. அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மைவிட்டுத் தூக்கம் அகலும்வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் (உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப்போக, அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து)விடக்கூடும்.- இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 முஸ்லிம் - 1440.

அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே!" என்று கேட்டனர். 'நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் 'நான் உங்களை எழுப்பி விடுகிறேன்' என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?' என்று கேட்டார்கள். 'இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை' என்று பிலால்(ரலி) கூறினார். 'நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) 'பிலாலே! எழுந்து தொகைக்கு பாங்கு சொல்வீராக!" என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்.
புகாரி  - 595.


Thursday, 30 May 2013 by Unknown · 0

Wednesday, 29 May 2013

வீண் விரயம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 


 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

வீண் விரயம் :

2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.

6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.

17:27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
17:29. (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.

25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களைப் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 6290.

இது மட்டுமின்றி தாங்கள் செய்யும் விரயத்திற்கும், கணவன் இல்லாத போது வீட்டில் நடப்பவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பெண்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
(நூல்: புகாரீ 2409)

அல்லாஹ் அருளியதைக் கொண்டு மன நிறைவு கொண்டு, மேலும் பொருளாதார வளத்திற்காக அவனிடமே மன்றாடி, அவன் காட்டித் தந்த வழியில் நம்முடைய பொருளாதாரங்களைச் செலவழித்தால் வாழ்க்கை வசந்தமாக அமையும்.

Wednesday, 29 May 2013 by Unknown · 2

Tuesday, 28 May 2013

மரணம்

                                           பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். 

3:156. முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.

4:18. இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

4:78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

4:100. இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.

6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).

8:50. மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: ‘எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்’ என்று.

8:51. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

26:129. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களானநபித்தோழர்களே அப்பள்ளி வாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச்சுமந்து வந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். 'பாவம் அம்மார் இவரை வரம்பு மீறியகூட்டத்தினர் கொலை செய்வார்கள்' என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.
புகாரி - 2812, 447.

எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் – இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான் மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்” (அல்-குர்ஆன் 14:27)

உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6351.

யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்துகொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் – 3869.

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்தித்த நிலையில் (இணைகற்பித்த நிலையில்) எவர் இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார்‘ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாத எவரிடமும் பிரார்திக்காத நிலையில் (இணை கற்பிக்காத நிலையில்) எவர் இறந்து விடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்‘ என்று நான் சொன்னேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி - 4497.

Tuesday, 28 May 2013 by Unknown · 0

Monday, 27 May 2013

உழைப்பு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
 (அல்குர்ஆன் - 62:10)

மேலும் வாசிக்க

Monday, 27 May 2013 by Unknown · 0

Sunday, 26 May 2013

இறையச்சம்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!இறையச்சம் :

2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.

2:63. இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).

2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; ...

.2:212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ....

3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.

3:198. ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.

5:2. ...இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

7:128. மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.

7:171. ... “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).

7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

41:17. ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

16:128. நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

22:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

39:27. இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

39:28. (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).

39:33. அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
 

Sunday, 26 May 2013 by Unknown · 0

Saturday, 25 May 2013

கடன் பற்றி இஸ்லாம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

ஒருவன் பட்டினி கிடக்கிறான் என்றால் அது அவனது உடலை பாதிக்கும், வலிமையை குறைக்கும். ஆனால் அவன் உள்ளத்தால் எத்தகைய பாதிப்பும் அடையமாட்டான். 
ஒரு வேளை இல்லையென்றால் அடுத்த வேளை அவனுக்கு உணவு கிடைத்து விடும். அவன் ஆரோக்ய நிலையைப் பெற்று விடுவான்.

மேலும் வாசிக்க

Saturday, 25 May 2013 by Unknown · 0

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!


குறைந்த முதலீட்டில், குறைந்த இடத்தை வைத்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்க வாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம், கழிவிலிருந்து காசு முளைக்கும் காளான் வளர்ப்பு பற்றி பார்ப்போம். இன்றைக்கு இறக்கை கட்டி பறக்கும் இறைச்சியின் விலை, காளான் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது

மேலும் வாசிக்க

by Unknown · 0

Friday, 24 May 2013

திருமணம் பற்றி இஸ்லாம்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 




இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி – 5066.

மேலும் வாசிக்க

Friday, 24 May 2013 by Unknown · 0

Thursday, 23 May 2013

ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை)

                                                                        பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்; அன்று தான் யுக முடிவு நிகழும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1548.

மேலும் வாசிக்க

Thursday, 23 May 2013 by Unknown · 0

அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


திருக்குர்ஆன் மனித நேயத்தைத்தான் போதிக்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் தீவிரவாதத்தை அது ஆதரிக்கவில்லை. மாறாக அதை வலிமையாக எதிர்க்கவே செய்கிறது.

எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவர் ஒருவர் ஒரு மனிதனை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார். (அல்குர்ஆன் 5:32)

மேலும் வாசிக்க

by Unknown · 0

Wednesday, 22 May 2013

நேர் வழி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

மேலும் வாசிக்க

Wednesday, 22 May 2013 by Unknown · 0

Tuesday, 21 May 2013

பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..


கடந்த பதிவில் பேஸ்புக் பேன் பேஜ் என்னும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி? என்று பார்த்தோம் அல்லவா? அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ  வைப்பது எப்படி என்று பார்ப்போம். 

இதனை கடந்த பதிவிலேயே எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் நீளமாக போய்விடும் எனக் கருதி தனிதனியாக எழுதினேன்.

மேலும் வாசிக்க

Tuesday, 21 May 2013 by Unknown · 1

பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Monday, 20 May 2013

பழந்தமிழரின் முகத்தல் அளவை முறைகள்

நமது தமிழரின்  பலவகையான வாழ்க்கை முறைகளில் இந்த முகத்தல் அளவை முறைகளும் சிறப்பு  வாய்ந்தவையே. இதன் மூலமாகவே  பலதரப்பட்ட  வியாபார பரிமாற்றம்  செய்து வந்தனர். 

நம் தமிழ் மக்களால் பாரம்பரியமாக செய்து வந்த இந்த அளவை முறைகள் இந்நாளில் காணாமல் போனாலும் ஒரு சில கிராம மக்களால் பயன்படுத்தி வருவது சற்று ஆறுதலான செய்தி. அந்த அளவை முறைகளை என்னென்ன என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

Monday, 20 May 2013 by Unknown · 0

வியாபாரம்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
(அல்குர்ஆன் - 2:282)

மேலும் வாசிக்க

by Unknown · 0

Sunday, 19 May 2013

சாப்ட்வேர் கீகளை சேமித்துவைக்க

நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களை நாம் புதியதான இன்ஸ்டால் செய்யும் சமயம் அதனுடைய கீ யை உள்ளீடு செய்வோம். சில நாள் கழித்து பார்மெட் செய்து இன்ஸடால் செய்தாலும் சரி - அந்த குறிப்பிடட சாப்ட்வேர் கரப்ட் ஆகிவிட்டால் மீண்டும் இன்ஸ்டால் செய்யும் சமயம் நம்மிடம் கீ கேட்கும். பெரும்பாலும் நாம் அதனை குறித்துவைப்பது இல்லை.கீ இல்லாமல் அதனை இன்ஸ்டால் செய்ய முடியாது. இந்த குறையை நிவர்த்தி செய்ய இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு பயன்படுகின்றது.214 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபப்ன் ஆகும்.
 இதில் உள்ள Scan கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் அனைத்து கீகளும் கிடைக்கும்.
இதனை நாம் பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டோ அல்லது வேர்ட் பைலில் காப்பி செய்தோ வைத்துக்கொள்ளலாம்.தேவைப்படும் சமயம் அதிலிருந்து எடுத்து நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
source : http://velang.blogspot.com/2013/05/blog-post_19.html

Sunday, 19 May 2013 by Unknown · 0

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் - 112 : 1-4)

மேலும் வாசிக்க

by Unknown · 0

Saturday, 18 May 2013

பிளாக்கரில் தமிழ் டைப்பிங் விட்ஜெட் அமைக்க


உங்கள் வலைப்பூவில் (பிளாக்கரில்) தமிழில் கருத்துரைகள் தட்டச்சு செய்ய இந்த விட்ஜெட் உதவும்.
tamil typing widget in blogger
தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள், வாசகர்கள் கருத்துரைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு(English Typing) செய்வதைக் காட்டிலும் தமிழிலேயே தட்டச்சு(Tamil Typing) செய்து அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. இதனால் வாசகர்கள் நம் தமிழ் மொழியாம் தாய்த்தமிழில் தட்டச்சிட்டு தங்களது கருத்துகளை வெளியிட வாய்ப்பாக அமையும்.

மேலும் வாசிக்க

Saturday, 18 May 2013 by Unknown · 0

Friday, 17 May 2013

வாக்குறுதி மீறுதல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


இன்று வாக்குறுதி மீறுதல் அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (33)

மேலும் வாசிக்க

Friday, 17 May 2013 by Unknown · 0

Wednesday, 15 May 2013

தொழுகை பற்றிய குர்ஆன் வசனங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

உலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம் தனக்கு மட்டும் இருந்து தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. 

2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

மேலும் வாசிக்க

Wednesday, 15 May 2013 by Unknown · 0

Monday, 13 May 2013

கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்

                                                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

தங்கள் மனைவியரிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார் .என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். (திர்மிதி-1082)

மேலும் வாசிக்க

Monday, 13 May 2013 by Unknown · 0

Microsoft Security Essentials – சிறந்த இலவச ஆண்டி வைரஸ்



நம்மில் பெரும்பாலும் இலவச மென்பொருள்களையே பயன்படுத்த விரும்புவோம். முக்கியமாக ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் கட்டணமாக கிடைத்தாலும் அதன் இலவச வெர்சனை தான் பயன்படுத்துவோம். கட்டண மென்பொருள் என்பதை தாண்டி அவற்றின் அதிகபட்ச விலையும் இதற்கு ஒரு காரணம். இந்த நிலையில் ஒரு இலவச ஆண்டி வைரஸ் உங்கள் கணினிக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கினால்? 

மேலும் வாசிக்க

by Unknown · 0

மறந்து போன Software Key – ஐ கண்டுபிடிப்பது எப்படி?


கணினியில் நாம் பல மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம். சில நேரம் குறிப்பிட்ட மென்பொருளின் Licence Key – ஐ நாம் மறந்து விடுவோம். அதை இன்னொரு கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது முழித்துக் கொண்டிருப்போம். அதை தவிர்க்க எளிதாக Licence Key - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Saturday, 11 May 2013

பெற்றோரை பேணுதல்


                                                                     பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

"அல்லாஹ்வின் தூதரே! 
மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?" என்று நான் கேட்டேன். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். 
அடுத்ததாக யார் ? எனக்கேட்டேன். "உன் தாய்" என்றார்கள். 
அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தாய் " என்றார்கள். 
அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தந்தை " என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). நூல்: புகாரி(5971)

மேலும் வாசிக்க

Saturday, 11 May 2013 by Unknown · 0

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழமுடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
(அல்குர்ஆன் - 16 : 78)

மேலும் வாசிக்க

by Unknown · 0

Friday, 10 May 2013

மென்பொருள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகப்படுத்த...


increase pc's speed without software
Increase your system speed
வாங்கிய புதிதில் கணினியில் வேகம்  சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்.. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

தற்போது மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.

நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Run

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.

ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில்gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில்

மேலும் வாசிக்க

Friday, 10 May 2013 by Unknown · 0

Thursday, 9 May 2013

உலக வாழ்க்கை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”(அல்குர்ஆன் - 3:185)

மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்குர்ஆன் - 6:32)

மேலும் வாசிக்க

Thursday, 9 May 2013 by Unknown · 0

Wednesday, 8 May 2013

பொய் மிகப் பெரும் பாவம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

பொய் மிகப் பெரும் பாவம் :

சிலருக்கு பொய் கூறுவதென்பது என்பது குழாயிலிருந்து நீர் வருவதுபோல் அவ்வளவு சுலபமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் ரெடிமேடாக பொயயைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தாங்கள் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற பெருமிதம் வேறு. ஆனால் இவர்களின் ஒரு பொய்யால் மனித சமூகத்தில் ஏற்படும் பல தீங்குகளைப் பற்றி இவர்களுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது.

மேலும் வாசிக்க

Wednesday, 8 May 2013 by Unknown · 0

சுப்ஹானல்லாஹ்


நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம்.
அப்போது அவர்கள், " உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா ?'' என்று கேட்டார்கள்.
அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் , " எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும் ? '' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை "சுப்ஹானல்லாஹ் ' என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன '' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 5230
 

by Unknown · 0

Tuesday, 7 May 2013

நமது பிளாக்கரில் Back to Top பட்டனை கொண்டுவர..


நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும்
மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக
இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த
பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும்.
ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக
பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.

மேலும் வாசிக்க

Tuesday, 7 May 2013 by Unknown · 0

இணை வைத்தல்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான். நான் இணையானவனை விட்டு இணைகற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும்;,அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). நூல்: முஸ்லிம் 5708.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Saturday, 4 May 2013

இக்லாஸ் என்ற உளத்தூய்மை


மனித சமுதாயத்தை படைத்த இறைவன் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்து வைத்துள்ளான். ,மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எந்தவொரு காரியத்தைப் பற்றிப் பேசினாலும் யாரையும் ஆதரிப்பதாக இருந்தாலும் எச்செயலை செய்தாலும் அதற்கு பின்புலமாக ஏதாவது ஒரு எண்ணம் அல்லது நோக்கம் (அதாவது அல்லாஹ்விற்காக, முகஸ்துதிக்காக, (பிறருக்காக) சுயநலனுக்காக, பொதுநலனுக்காக, பேருக்காக, புகழுக்காக, பிறர் பாரா
ட்டுதலுக்காக) இருக்கும். அது இல்லாமல் எவரும் எச்செயலையும்எப்பேச்சையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை.


மேலும் வாசிக்க

Saturday, 4 May 2013 by Unknown · 0

Thursday, 2 May 2013

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்-மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங் களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்-மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
புஹாரி - 2442. 


மேலும் வாசிக்க

Thursday, 2 May 2013 by Unknown · 0

Wednesday, 1 May 2013

அநியாயக்காரர்கள்

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

நான் இப்னு உமர் (ரலி) அவர் களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு அவன், ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த முஃமின், நாம் இத்தோடு ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான். அப்போது அவனது நற் செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும்.
நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந் துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும் என்று கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
புஹாரி - 2441.

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.(அல் குர்ஆன் - 11:18)

Wednesday, 1 May 2013 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program