Thursday, 2 May 2013
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்-மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங் களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்-மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
புஹாரி - 2442.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக் குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக் காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி) என்று கூறினார்கள்.
புஹாரி - 2444.
4:148. அல்லாஹ் கூறுகிறான்: அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறு வோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
4:149. அல்லாஹ் கூறுகிறான்: ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயலைச் செய்த வண்ணம் இருந்தால், அல்லது குறைந்த பட்சம் அக்கிரமக்காரர்களின் தீங்கை மன்னித்து விட்டால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கிறான். (என்றாலும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
42:39. மேலும், அவர்கள் (நம்பிக்கையாளர்கள்) தங்கள் மீது அநீதியிழைக்கப்படும் போது அதை எதிர்த்துப் போராடு கின்றார்கள்.
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
42:43. ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
42:44. “இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் ”
Post a Comment