Wednesday, 22 May 2013
நேர் வழி
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
3 :31. நபியே!) நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள்.அல்லாஹ் உங்களை நேசிப்பான்.உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்.மேலும்அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
எவன் என் நடைமுறையைப் புறக்கணிக்கின்றானோ அவன் என்னை சேர்ந்தவன் அல்ல" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரி 5063.
நமது உத்தரவில்லாத செயலை எவர் செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் " என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), முஸ்லிம் 3243.
"மார்கத்தில் புதிது புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத்தாகும். எல்லா பித்அத்துகளும் வழிகேடாகும்.
எல்லா வழிகேடுகளும் நரகத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும்" எனவும் நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நஸயீ -1560.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ நேர் வழி ”
Post a Comment