Saturday, 18 May 2013

பிளாக்கரில் தமிழ் டைப்பிங் விட்ஜெட் அமைக்க


உங்கள் வலைப்பூவில் (பிளாக்கரில்) தமிழில் கருத்துரைகள் தட்டச்சு செய்ய இந்த விட்ஜெட் உதவும்.
tamil typing widget in blogger
தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள், வாசகர்கள் கருத்துரைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு(English Typing) செய்வதைக் காட்டிலும் தமிழிலேயே தட்டச்சு(Tamil Typing) செய்து அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. இதனால் வாசகர்கள் நம் தமிழ் மொழியாம் தாய்த்தமிழில் தட்டச்சிட்டு தங்களது கருத்துகளை வெளியிட வாய்ப்பாக அமையும்.

இதைச் செயல்படுத்த...
  • உங்கள் பிளாக்கரின் கணக்கில் உள்நுழைந்து(login)கொள்ளுங்கள்.
  •  Dashboard ==>  Design ==>Page Elements==> Add a Gadget==> Html/Javascript==> செல்லவும்.
  • புதிய இடைமுகத்தைப் பயன்படுத்துபவர்கள் Design==>Add a Gadget==> Html/Javascript==>செல்லவும்.
பிறகு தேர்ந்தெடுத் Html/Javascript விட்ஜெட்டில் கீழுள்ள நிரல் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.


சேமித்த Gadget - ஐ உங்களுக்கு விருப்பமான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Gadget -ன் தலைப்பு பகுதியில் "தமிழில் தட்டச்சு செய்ய" என்று எழுதிக்கொள்ளலாம்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மாற CTRT+G அழுத்தி மாறிக்கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ் தட்டச்சு செய்ய விட்ஜெட்(Widget or Gadget) உங்கள் தளத்தில் தோன்றும். இதில் "amma" என தட்டச்சிட்டால் "அம்மா'' என வெளிப்படும்.

இனி உங்கள் பிளாக்கர் தளத்திற்கு தமிழ் தட்டச்சு தெரியாவிடினும், ஆங்கிலத்தைப் பயன்படுத்தி தமிழில் தட்டசிட்டு கருத்துகளை எழுத முடியும். 

source : 
http://www.techthangam.com/2012/04/tamil-typing-widget-in-bloggerupdated.html#.UZe3H6K8XDk

0 Responses to “ பிளாக்கரில் தமிழ் டைப்பிங் விட்ஜெட் அமைக்க ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program