Saturday, 11 May 2013
அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழமுடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
(அல்குர்ஆன் - 16 : 78)
இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களை பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான்.(அல்குர
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.(அல்குர்ஆன் - 20:132)
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
(அல்குர்ஆன் - 51 : 56 - 58)
(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன் - 22 : 78)
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ”
Post a Comment