Tuesday, 7 May 2013

இணை வைத்தல்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான். நான் இணையானவனை விட்டு இணைகற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும்;,அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). நூல்: முஸ்லிம் 5708.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு இணைவைக்கும் இணைவைப்பாளனிடமிருந்து எந்த நற்காரியத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி). நூல்: இப்னுமாஜா 2527.

உங்கள் விசயத்தில் நான் மிக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுதான் முகஸ்துதி மறுமைநாளில் மக்களுடைய செயல்பாடுகளுக்குக் கூலி கொடுக்கப்படும் போது இந்த உலகத்தில் யாருக்காக (அமைப்புக்காக) நீங்கள் நற்காரியங்கள் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள் உங்களுக்கு கூலி அவர்களிடம் உள்ளதா என்று பாருங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி). நூல்: அஹ்மத் 22523.

இறுதியாக கலப்பில்லாத மார்க்கத்தை அல்லாஹ் தன் தூதருக்கு எவ்வாறு ஏவினானோ அவர் எவ்வாறு வாழ்ந்து காண்பித்தார்களோ அது போன்று தான் நாமும் நடக்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையயில் நமது சொல் செயல்களிலும் ரியா ஷிர்க் இன்றி செய்து ஈமானை பரிபூரணப்படுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள : அல்லாஹ் (விரும்பியதை)விற்காக விரும்புகிறாரோ, அல்லாஹ் (வெறுத்ததை)விற்காக வெறுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக தடுக்கிறாரோ (அவர் தன்) ஈமானை பரிபூரணப்படுத்திவிட்டார்.
அறிவிப்பவர்: அபுஉமாமா(ரலி). நூல்: அபூதாவூத் 4061.

மேலே குறிப்பிடப்படவற்றை சிந்தித்து செயல்படுவோமாக!
 

0 Responses to “ இணை வைத்தல் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program