Wednesday, 8 May 2013
பொய் மிகப் பெரும் பாவம்
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
பொய் மிகப் பெரும் பாவம் :
சிலருக்கு பொய் கூறுவதென்பது என்பது குழாயிலிருந்து நீர் வருவதுபோல் அவ்வளவு சுலபமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் ரெடிமேடாக பொயயைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தாங்கள் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற பெருமிதம் வேறு. ஆனால் இவர்களின் ஒரு பொய்யால் மனித சமூகத்தில் ஏற்படும் பல தீங்குகளைப் பற்றி இவர்களுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது.
பொய் ஒரு நோய் :
அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்தால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்ஆர்ஆன் - 2:10)
பொய் ஒரு பாவம் :
(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள்.
நாங்கள், 'ஆம்இ இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து 'அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் 'அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன். (புஹாரி 5976,5977)
அல்லாஹ்வின் மீது பொய்:
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்” என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. (அல்குர்ஆன் - 11:18)
‘இது அனுமதிக்கப்பட்டது, இது விலக்கப்பட்டது’ என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் - 16:116)
அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களை பூமியிலிருந்து படைத்தபோதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்தபோதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
(அல்குர்ஆன் - 53:32)
அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பொய் மிகப் பெரும் பாவம் ”
Post a Comment