Saturday, 11 May 2013
பெற்றோரை பேணுதல்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
"அல்லாஹ்வின் தூதரே!
மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?" என்று நான் கேட்டேன். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள்.
அடுத்ததாக யார் ? எனக்கேட்டேன். "உன் தாய்" என்றார்கள்.
அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தாய் " என்றார்கள்.
அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தந்தை " என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). நூல்: புகாரி(5971)
நான் நபி( ஸல்) அவர்களிடம், "கண்ணியமும், மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்க்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், " தொழுகையை அதற்குறிய நேரத்தில் நிறைவேற்றுவது " என்றார்கள். "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய்,தந்தையருக்கு நன்மை செய்வது" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி). நூல்: புகாரி(5970)
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குர்ஆன் - 31:14)
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் - 17: 23)
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் - 17: 24)
அல்லாஹ் கூறுகின்றான்:
“நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14 ).
அல்லாஹ் கூறுகின்றான்:
“மனிதன் தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யும்படி நாம் உபதேசம் செய்தோம்” (அல்-அஹ்காப்: 15).
அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பெற்றோரை பேணுதல் ”
Post a Comment