Monday, 27 May 2013
உழைப்பு
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
(அல்குர்ஆன் - 62:10)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர் என மிக்தாம்(ரலி) அறிவித்தார். (புகாரி : 2072)
பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளை சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.(ஏனெனில்) அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்,மறுக்கவும் செய்யலாம். (புகாரி : 2074, 2075) பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளை சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.(ஏனெனில்) அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்,மறுக்கவும் செய்யலாம். (புகாரி : 2074, 2075) பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளை சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.(ஏனெனில்) அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்,மறுக்கவும் செய்யலாம். (புகாரி : 2074, 2075)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர்.
அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலம்) இடைவெளி உண்டானது.
மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(புகாரி : 2215)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையெனில் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். அவன் மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. (புகாரி : 2492)
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார் 'தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், '(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்' என்று கூறினார்கள். மக்கள், 'அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்' அல்லது 'அதை அவர் செய்யாவிட்டால்' (என்ன செய்வது?)' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்' என்றார்கள். மக்கள், '(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்போது அவர் 'நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்' என்றார்கள். '(இதையும்) அவர் செய்யாவிட்டால்?' என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், 'அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்' என்றார்கள்.
(புகாரி : 6022)
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ உழைப்பு ”
Post a Comment