Friday, 17 May 2013
வாக்குறுதி மீறுதல்

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இன்று வாக்குறுதி மீறுதல் அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (33)
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
(அல்குர்ஆன் - 4:142)
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.(அல்குர்ஆன் - 4:145)
நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (1041)
நபியவர்களின் காலத்தில் நடந்த சம்பவம்...
அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்' என்று கூறினார்கள். அந்தக் கொடி தங்கள் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்கள் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
'அலீ பின் அபீ தாப் எங்கே?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆள் அனுப்புங்கள்' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிராத்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்கடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரலி)அவர்கள், 'நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழி யளிப்பது (அரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: புகாரி (4210)
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ வாக்குறுதி மீறுதல் ”
Post a Comment