Monday, 20 May 2013

பழந்தமிழரின் முகத்தல் அளவை முறைகள்

நமது தமிழரின்  பலவகையான வாழ்க்கை முறைகளில் இந்த முகத்தல் அளவை முறைகளும் சிறப்பு  வாய்ந்தவையே. இதன் மூலமாகவே  பலதரப்பட்ட  வியாபார பரிமாற்றம்  செய்து வந்தனர். 

நம் தமிழ் மக்களால் பாரம்பரியமாக செய்து வந்த இந்த அளவை முறைகள் இந்நாளில் காணாமல் போனாலும் ஒரு சில கிராம மக்களால் பயன்படுத்தி வருவது சற்று ஆறுதலான செய்தி. அந்த அளவை முறைகளை என்னென்ன என பார்ப்போம்.

உழக்கு 


















1ஒரு ஆழாக்கு                    =  நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்(168 ML).




2ஒரு உழக்கு                      =  முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர் (336 ML)




3ஒரு கலம்                        =  அறுபத்தி நாலரை லிட்டர் (64.5 L)




4ஒரு தூணி                        =   இருபத்தி ஒன்றரை  லிட்டர் (21.5 L)




5ஒரு நெய்க்கரண்டி           =   தேக்கரண்டி அளவு .




6ஒரு எண்ணெய்க்                    =  இரு நூற்றி நாற்பது மில்லி லிட்ட {240 ML).
     கரண்டி 





7ஒரு பாலாடை                 =   முப்பது மில்லி லிட்ட {30 ML).




8ஒரு குப்பி                     =    எழுநூறு மில்லி லிட்ட {700 ML).




9ஒரு அவுன்ஸ்                   =  முப்பத்தியொரு கிராம் (31 Grm)   




10முன்னூற்று அறுபது நெல்      =  ஒரு சோடு .




11ஐந்து சோடு                      =  ஒரு ஆழாக்கு.




12இரண்டு ஆழாக்கு                =  ஒரு உழக்கு.




13இரண்டு உழக்கு                  =  ஒரு உரி.




14இரண்டு உரி                      =  ஒரு நாழி.




15எட்டு நாழி                      =    ஒரு குறுணி.




16இரண்டு குறுணி                  =  ஒரு பதக்கு.




17இரண்டு பதக்கு                  =  ஒரு தூணி.




18மூன்று தூணி                    =    ஒரு கலம்.
மேலும் பல அளவை முறைகளை இந்த படத்தின் மூலம் பார்த்து தெரிந்துகொள்ளலாம் .



 நம் முன்னோரின் பயன்பாட்டு முறைகளை கடைபிடிக்க தற்போது முடியாது என்றாலும் அதனை தெரிந்தாவது வைத்துக்கொள்வோம்.       

நன்றி : http://arivu-kadal.blogspot.in/2013/05/blog-post.html

0 Responses to “ பழந்தமிழரின் முகத்தல் அளவை முறைகள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program