Monday, 13 May 2013

கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்

                                                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

தங்கள் மனைவியரிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார் .என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். (திர்மிதி-1082)

அம்ரு பின் அஹ்வசில் ஜுசமி (ரலி) அறிவிக்கின்றார்கள்;-
அறிந்து கொள்ளுங்கள் ! உங்களிடமும் உங்கள் மனைவியருக்கு சில உரிமைகள் உள்ளன.உங்களிடம் உங்கள் மனைவியருகுரிய உரிமையாகிறது,அவர்களுக்கு உடையும், உணவும் அழகிய முறையில் நீங்கள் அளித்து வருவதாகும்.என நபி (ஸல்)அவர்கள் ௬றினார்கள். (திர்மிதி-1083)

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி-56)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:-
ஒரு முஃமினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால்,அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(முஸ்லிம்-2672)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார (புஹாரி-3331.)

0 Responses to “ கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program