Saturday, 4 May 2013
இக்லாஸ் என்ற உளத்தூய்மை
மனித சமுதாயத்தை படைத்த இறைவன் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்து வைத்துள்ளான். ,மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எந்தவொரு காரியத்தைப் பற்றிப் பேசினாலும் யாரையும் ஆதரிப்பதாக இருந்தாலும் எச்செயலை செய்தாலும் அதற்கு பின்புலமாக ஏதாவது ஒரு எண்ணம் அல்லது நோக்கம் (அதாவது அல்லாஹ்விற்காக, முகஸ்துதிக்காக, (பிறருக்காக) சுயநலனுக்காக, பொதுநலனுக்காக, பேருக்காக, புகழுக்காக, பிறர் பாராட்டுதலுக்காக) இருக்கும். அது இல்லாமல் எவரும் எச்செயலையும்எப்பேச்சையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை.
இது குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள் :
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்.
அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) நூல்: புகாரி 1.
அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) நூல்: புகாரி 1
ஆனால் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்திருந்தாலும் மனிதன் இறைவன் எந்த நோக்கத்திற்காக படைத்துள்ளானோ அதனையறிந்து அதற்கேற்றார் போல் மனிதர்கள் வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் மனித இனத்தை என்ன நோக்கத்திற்காக படைத்துள்ளான் என்பதற்காகவே
இறைவன் இஸ்லாமிய மார்க்கத்ததை வழங்கினான். இது தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏனைய மத, சமயங்களுக்குண்டான மிகப்பெரிய வித்தியாசமாகும். ஏனெனில்;அம்மார்க்கமானது மனித கர மாசுகளுக்கு அப்பாற்பட்டது அல்லாஹ் கூறியுள்ளான்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது (அல்குர்ஆன் 39:3)
அத்தோடு களங்கமில்லாத அல்லாஹ்வின் மார்க்த்தை எடுத்துச் சொல்வதற்காக தேந்தெடுத்து அனுப்பபபட்ட தூதர்மார்களுக்கும் அல்லாஹ் விடுத்த அறிவுரை என்னவெனில்
வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுளேன்.(அல்க
இறைவன் நபிமார்களுக்கு எதனை கட்டளையாக பிறப்பித்தானோ அதனையே தன் அடியார்கள் மீதும் கடமையாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான். வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும் ஸகாத்தை கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம் (அல்குர்ஆன் 98:5)
இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதராலும் சொல்லப்பட்டுள்ள எந்தவொரு வணக்கமானாலும்; அவற்றையெல்லாம் ஷிர்க் (இணையாக்காமலும்) ரியா (முகஸ்துதி) யின்றி முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே மட்டும் செய்ய வேண்டும் அப்போது தான் அந்த காரியங்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படும். ஏனெனில்
முகம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டார். ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடியும் தன்னைப் பற்றி நினைவு கூறப்படுவதையும் நாடியவராக போரில் கலந்து கொண்டால் அவருடைய நிலை என்ன? என்று வினவ அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு எதுவும் இல்லை என மூன்று முறை கூறிவிட்டு பின்பு சொன்னார்கள் நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் அமலைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளவதில்லை
அறிவிப்பவர்: அபு உமாமா அல் பாஹிலி (ரலி) நூல்: நஸாயீ 3089.
மற்றொரு நபிமொழியில் வந்துள்ளதாவது
நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்) தோற்றங்களையோஉங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்4651.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ இக்லாஸ் என்ற உளத்தூய்மை ”
Post a Comment